-கவியரசு கண்ணதாசன்
திரையுலகை ஆக்கிரமித்த திராவிட இயக்கத்தின் தொடக்கக் காலத்தில், அந்த இயக்கத்தின் இளம் நாற்றாக வெளிப்பட்ட கவியரசர் கண்ணதாசன் இயற்றிய அற்புதமான பாடல் இது. ‘மாலையிட்ட மங்கை’ (1958) என்ற இந்தத் திரைப்படமும், இந்தப் பாடலும் அக்காலத்தில் தமிழகமெங்கும் பிரபலமாகின. இத்திரைப்படத்தின் 15 பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டன. படத்தின் தயாரிப்பாளரும் அவரே. கவியரசரை தமிழகத்திற்கு முழுமையாக அறிமுகம் செய்வித்த திரைப்படம் இது எனில் மிகையில்லை.

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே…
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே!
நின்றது போல் நின்றாள்… நெடுந்தூரம் பறந்தாள்…
நிற்குமோ நெஞ்சம்? நிலைக்குமோ ஆவி?
மனம் பெறுமோ வாழ்வே!
..
செந்தமிழ்த் தேன்மொழியாள்,
நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்…
நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்…
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்,
பருகிடத் தலை குனிவாள்!
செந்தமிழ்த் தேன்மொழியாள்,
நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்…
நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்…
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்,
பருகிடத் தலை குனிவாள்!
காற்றினில் பிறந்தவளோ, புதிதாய் கற்பனை வடித்தவளோ…
காற்றினில் பிறந்தவளோ, புதிதாய் கற்பனை வடித்தவளோ…
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ, செவ்வந்தி பூச்சரமோ!
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ, செவ்வந்தி பூச்சரமோ!
அவள் செந்தமிழ்த் தேன்மொழியாள்,
நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்…
நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்…
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்,
பருகிடத் தலை குனிவாள்!
கண்களில் நீலம் விளைத்தவளோ,
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ!
கண்களில் நீலம் விளைத்தவளோ,
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ!
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ!
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ!!
அவள் செந்தமிழ்த் தேன்மொழியாள்,
நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்…
நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்…
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்,
பருகிடத் தலை குனிவாள்!
மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ,
விண் மீன்களை மலராய் அணிந்தவளோ!
மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ,
விண்மீன்களை மலராய் அணிந்தவளோ!
மோகத்திலே இந்த உலகம் யாவையும்
மூழ்கிடச் செய்யும் மோகினியோ!
மோகத்திலே இந்த உலகம் யாவையும்
மூழ்கிடச் செய்யும் மோகினியோ!!
அவள் செந்தமிழ்த் தேன்மொழியாள்,
நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்…
நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்…
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்,
பருகிடத் தலை குனிவாள்!
திரைப்படம்: மாலையிட்ட மங்கை (1958) இசை: விஸ்வநாதந் ராம்மூர்த்தி பாடகர்: டி.ஆர்.மகாலிங்கம்
$$$