மூன்றே பத்திகள் தான்; இதில் காணப்படும் ஆவேசம், மகாகவி பாரதியின் மற்றொரு முகமான அரசியலாளரை முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. மிதவாதிகள் மீதான காட்டமான விமர்சனத்தை முன்வைக்கும் திலகரின் சீடராக இங்கேபாரதி மிளிர்கிறார்....
Month: December 2022
கெட்டிஸ்பர்க் உரையும் சிகாகோ முழக்கமும்
டாக்டர் திரு. என்.ராம் தமிழகத்தைச் சார்ந்தவர்; தற்போது லண்டன் நகரில் மருத்துவராகப் பணிபுரிகிறார். இவர் 2013-இல் தினமணியில் எழுதிய கட்டுரை இங்கே....
பாஞ்சாலி சபதம் – 2.2.1
சூதாட்டம் அதன் அதி உச்சத்தை எட்டுகிறது. பாஞ்சாலியைப் பணயம் வைத்து இழக்கிறான் தருமன். மகாகவி பாரதி பொங்குகிறார். அவருக்கு பாஞ்சாலியின் வீழ்ச்சி பாரத அன்னையின் வீழ்ச்சியாகத் தெரிகிறது. “செருப்புக்கு தோல் வேண்டியே - இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை?” என்று வினவும் அவர், “வேள்விப் பொருளினையே - புலை நாயின்முன் மென்றிட வைப்பவர்போல்”, ஆவியில் இனியவளை, வடிவுறு பேரழகை, புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை, கொடியவர் அவைக்களத்தில் பணயம் வைத்து இழந்து விட்டான் கோமகன் தருமன்- என்கிறார்....
பாரதியும் பாரதிதாசனும் – 2
இற்றைக்கு நூறாண்டுகளின் முன்னர்த் தோன்றிய சங்கரதாஸ் சுவாமிகளின் கவிதைத் திறனை ஆராயு முன்னர் அன்றைய தமிழ் இலக்கியம் எவ்வாறு இருந்தது என்பதை அறிதல் வேண்டும். மிகப் பலவாய நாடகங்களையும் கீர்த்தனைகளையும் சுவாமிகள் எழுதியுள்ளார்கள் என்று அறிகிறோம். தமிழ் நாடகத்தின் ஆணிவேராகத் திகழ்ந்தவர்கள் பலரை சுவாமிகள் உருவாக்கித் தந்துள்ளார் என்பதையும் அறிகின்றோம்....
மனிதவள மேம்பாடே அவரது இலக்கு
கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆண்டுதோறும் நிகழ்த்தி வரும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிக நிகழ்ச்சியின் நிறைவு நாளான 6.1.2013 அன்று, கோவை, பாரதிய வித்யாபவன் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தமது தலைமை உரையில் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பே இக்கட்டுரை.
பாஞ்சாலி சபதம் – 2.1.13
துரியோதனனின் ஆர்ப்பரிப்பைத் தடுக்கும் தாய்மாமன் சகுனி, மேலும் வஞ்சக நெஞ்சுடன் பேசுகிறான். களி விளையாட்டுக்காக ஆடிய சூதில் தோற்ற சகோதரர்களை ஏளனம் செய்தல் முறையல்ல என்று மருகனிடம் கூறும் அவன், பாண்டவரின் மனைவியான பாஞ்சாலியைப் பணயம் வைத்து ஆடினால், அவளது அதிர்ஷ்டத்தால் இழந்த அனைத்தையும் தருமன் திரும்பப் பெறலாம் என்கிறான். இது நல்ல ஆலோசனை என்கிறான் துரியன் - தேன் கலசத்தை நக்க விழையும் நாய் போல என்கிறார் மகாகவி பாரதி. இத்துடன் அடிமைச் சருக்கம் முற்றுப் பெறுகிறது...
ஸ்வதந்திர கர்ஜனை- 2(19)
1942-ஆம் ஆண்டு. ஆம்! நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னால், இந்தியாவை ஆணி அடித்தது போல நின்று நிதானித்து ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷார் இந்த நாட்டைவிட்டு பெட்டி படுக்கைகளுடன் புறப்பட வைக்கும் ஓர் இறுதிக்கட்டப் போராட்டம் தொடங்கப்படும் நேரம் நெருங்கிவிட்டது. அந்தப் போராட்டத்துக்குப் பச்சைக்கொடி காட்டப்போகும் காங்கிரஸ் மாநாடு, பம்பாய், ஆசாத் மைதானத்தில் 1942, ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி நடைபெற்றது....
இந்தியாவின் பழம்பெருமைகளை இளைஞர்கள் மீட்டெடுக்க வேண்டும்!
தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளரான திரு. வெ.இறையன்பு ஐஏஎஸ், திருப்பூரில் 2014-இல் நிகழ்த்திய உரையின் சுருக்கம் இது...
பாஞ்சாலி சபதம் – 2.1.12
சூதாட்டத்தில் செல்வங்கள், நாடு, சகோதரர்களை இழந்த தருமன் இறுதியில் தன்னையும் பணயம் வைத்து இழக்கிறான். உடனே துரியன் ஆர்ப்பரிக்கிறான். “இதை எங்கும் பறையறை வாயடா- தம்பி!” என துச்சாதனனிடம் கூறுகிறான்...
மகாவித்துவான் சரித்திரம்- 2(10ஆ)
இவருடைய அசெளக்கிய மிகுதியைத் தெரிந்து சுப்பிரமணிய தேசிகர் அடிக்கடி பார்த்துவரும்படி தக்கவர்களை அனுப்பித் தெரிந்து கொண்டேயிருந்ததன்றி அடிக்கடி வந்து சொல்லும்படி எனக்கும் கட்டளையிட்டிருந்தார். அப்படியே அடிக்கடி சென்று இவருடைய நிலையைத் தெரிவித்துக்கொண்டு வரலாயினேன்.
பாரதியிடம் விவேகானந்தரின் தாக்கம்
திரு. தமிழருவி மணியன், சட்டம் பயின்றவர்; தமிழகம் அறிந்த பேச்சாளர்; எழுத்தாளர். காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர். ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’, ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ ஆகிய நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
பாஞ்சாலி சபதம்- 2.1.11
சூதாட்டம் உச்சத்தை எட்டிவிட்டது. நாட்டையும் செல்வங்களையும் சகோதரர்களையும் சூதில் இழந்த தருமன், இறுதியாக தன்னையே பணயம் வைக்கிறான்... தோற்கிறான். “இவன் தன்னை மறந்தவ னாதலால் - தன்னைத் தான் பணயமென வைத்தனன்” என்கிறார் மகாகவி பாரதி, தருமனின் கையறு நிலை கண்டு.
மார்கழிப் பனித்துளி (4-5)
‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் எழுதும் ‘மார்கழிப் பனித்துளி’ இசைக் கவிதைகளை இங்கே மீள்பதிவு செய்கிறோம். இங்கே உள்ளவை இரு கவிதைகள்....
ஸ்வதந்திர கர்ஜனை- 2(18)
ஜெர்மனியின் வெற்றி படிப்படியாகக் கிடைத்துக் கொண்டிருந்த நிலையில் 1941, ஜூன் மாதத்தில் ஜெர்மனி ரஷ்யாவின் மீது படையெடுத்துச் சென்றது. அதுவரை ரஷ்யா ஜெர்மனியோடு ஒரு யுத்தமில்லா அமைதி ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டிருந்தது. ரஷ்யா எதைச் செய்தாலும் ‘ஆமாம்’ சாமி போடும் இந்திய கம்யூனிஸ்டுகளும் இந்த யுத்தத்தை ஏகாதிபத்திய யுத்தம் என்று பறைசாற்றிக் கொண்டிருந்தனர். எந்த நேரத்தில் ஜெர்மனி ரஷ்யா மீது படையெடுத்துச் சென்று தாக்கத் தொடங்கியதோ அப்போது நமது இந்திய கம்யூனிஸ்டுகள் தாங்கள் பாடிவந்த ராகத்தை மாற்றி, யுத்தத்துக்கு “மக்கள் யுத்தம்” என்று செல்லப் பெயரிட்டு அழைக்கலாயினர். ரஷ்யாவின் எதிரியான ஜெர்மனி பிரிட்டனுக்கும் எதிரி என்பதால், ரஷ்யாவுடன் ஜெர்மனியை எதிர்க்கும் பிரிட்டனுக்கு கம்யூனிஸ்டுகள் யுத்த ஆதரவு பிரசாரம் செய்யத் தொடங்கினர்...
அரசியலுக்கு வர சுவாமி விவேகானந்தர் தான் தூண்டுகோல்
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி, தமிழகம் முழுவதுமான ஓராண்டு கால தொடர் கொண்டாட்டத்தை 27.2.2013-இல் சென்னையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் செல்வி ஜெ.ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியதன் சுருக்கம் இது.