கங்கை – காவிரி சங்கமம்

மத்திய கல்வி அமைச்சகத்தின் ஏற்பாட்டில் வாராணசியில், நவம்பர் 17-இல் தொடங்கி  ‘காசி தமிழ் சங்கமம்’  டிசம்பர் 16 வரை தொடர்ந்து கலாச்சார பரிமாற்ற விழாவாக நடைபெற்றது. காசியையும் தமிழகத்தையும் இணைக்கும் பாரம்பரிய வேர்களை நினைவுறுத்தும் இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்க தமிழகத்திலிருந்து எழுத்தாளர்கள் பலர் சென்று வந்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற  ‘விஜயபாரதம்’ வார இதழின் முன்னாள் ஆசிரியரும், ஜோதிட வல்லுநருமான திரு. ஸ்ரீதரம் கு.சிவகுமார் அவர்களின் அனுபவப் பகிர்தல் இது….

மோடியின் தமிழகம் – ஒரு கண்ணோட்டம்

‘மோடியின் தமிழகம்: உண்மை பேசுகிறது’ நூல் நமது தள வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானது தான். இந்நூல் குறித்த கண்ணோட்டத்தை இங்கு பதிவு செய்கிறார், தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...

தனி ஒருவனுக்கு

தீண்டாமையையும் பசிக் கொடுமையையும் போலித்தனங்களும் கண்டு வெட்கி, ஆவேசம் கொள்ளும் புதுமைப்பித்தனின் அக்கால நடையிலான சிறுகதை இது…

ஞானகங்கை

ஸ்ரீ குருஜி கோல்வல்கர் என்று அழைக்கப்படும் பரமபூஜனீய குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) இரண்டாவது தலைவராக இருந்தவர்; பெரும் தபஸ்வி; சிந்தனையாளர்; சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட இயக்கச் செயல்வீரர்; தேசிய மறுமலர்ச்சிப் பணியில் தனது வாழ்வையே அர்ப்பணமாக்கியவர். ‘ஞானகங்கை’ என்ற நூல் தொகுப்பு குருஜியின் சிந்தனைக் களஞ்சியமாகும். இக்கட்டுரை ‘தியாகபூமி’ வார இதழில் வெளியானதாகும்.

சத்திய சோதனை – 5 (36-40)

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஞாபகார்த்தச் சின்னம் அமைப்பதென்று காங்கிரஸில் மிகக் குதூகலத்தினிடையே ஒரு தீர்மானம் நிறைவேறியிருந்தது. இதற்காக ஐந்து லட்சம் ரூபாய் நிதி திரட்ட வேண்டும். இந்த நிதிக்கு என்னையும் ஒரு தருமகர்த்தாவாக நியமித்தார்கள். பொதுக்காரியங்களுக்குப் பிச்சை எடுப்பதில் மன்னர் என்று பண்டித மாளவியாஜி கீர்த்தி பெற்றிருந்தார். ஆனால், இந்தக் காரியத்தில் அவருக்கு நான் அதிகம் பின்வாங்கியவன் அல்ல என்பது எனக்குத் தெரியும். நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதுதான் இத்துறையில் எனக்கு இருந்த ஆற்றலைக் கண்டுபிடித்தேன். என்றாலும், சுதேச மன்னர்களிடமிருந்து பெருந்தொகையை வசூலித்துவிடுவது மாளவியாஜிக்கு இருந்த இணையில்லாத ஜாலவித்தை என்னிடம் இல்லை.....

பாஞ்சாலி சபதம்- 2.1.1

யாரை எங்கு வைக்க வேண்டும், எந்த நேரத்தில் எது நடக்க வேண்டும் என்பதெல்லாம் நமது முடிவல்ல; பராசக்தியின் லீலை. அதனைக் குறிப்பிட்டு, இரண்டாம் பாகம் எழுத ஆசி வேண்டுகிறார் மகாகவி பாரதி...