இந்தத் தடவை ஒரு மாற்றத்துக்கு அந்த அக்ரஹாரத்து மனுஷாளை விட்டுட்டு எனக்குத் தெரிஞ்ச ஒரு பூனையைப் பற்றி எழுதப் போறேன். பூனைகளுக்கு நிச்சயமாய் அலுப்போ சலிப்போ பயமோ சங்கடமோ வராது. பூனைகள் கதை படிக்கிறதோ, கதை திருடறதோ இல்லே. பூனைகளைப் பார்த்தா நம் கண்ணுக்குத் தான் ‘ஆஷாடபூதி’ மாதிரி இருக்குமே தவிர பாவம், அதுகளுக்கு அந்த மாதிரி குணமெல்லாம் நிச்சயம் கிடையாது.
Day: December 22, 2022
இவர் தான் வீரத்துறவி விவேகானந்தர்
திரு.ப.ஜீவானந்தம் (1907- 1963), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளுள் ஒருவர்; தமிழகத்தில் பொதுவுடைமை சித்தாந்தம் பரவக் காரணமான பெரியோர்; ஜனசக்தி பத்திரிகையின் நிறுவனர்; சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
பாஞ்சாலி சபதம் – 2.1.5
அவையில் சூதாட்டத்தை விதுரனைத் தவிர எதிர்ப்பார் யாருமில்லாத சூழலில், மீண்டும் தொடர்கிறது, வம்சம் அழிக்க வந்த சூது. பாண்டவர் தலைவனான தருமன் அங்கு நாட்டை பணையம் வைத்து இழக்கிறான். மன்னனே ஆயினும் நாட்டை ஆள மட்டுமே உரிமை உடையவன்; அவன் நாட்டை தனது சொந்தச் சொத்தாகக் கருதக் கூடாது என்று பொருள்பட, கோயில் பூசாரி கடவுள் சிலை விற்பதுபோல, வாயில் காப்போன் காக்க வேண்டிய வீட்டை சூதில் வைத்து இழப்பது போலவும், தேசத்தை சூதில் பணையம் வைத்து இழக்கிறான் தருமன் என்று கூறிக் கண்டிக்கிறார் மகாகவி பாரதி. “சீச்சீ! சிறியர் செய்கை செய்தான்” என்றும் குமுறுகிறார். மகாகவியின் தேசபக்தி கனலென வெளிப்படும் கவிதைத் தருணம் இது ...