ஸ்வதந்திர கர்ஜனை – 2(13)

சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது லாகூரில் ஒரு மாபெரும் ஊர்வலத்தைத் தலைமையேற்று நடத்திச் சென்றார் லாலா லஜபதி ராய் என்பதை முன்பே பார்த்தோமல்லவா? அந்த ஊர்வலத்தைத் தடிகொண்டு தாக்கிய சார்ஜண்ட் ஜான் சாண்டர்ஸ் என்பான் லாலாஜியை கண் மண் தெரியாமல் மார்பில் அடித்ததில் அவர் உயிருக்குப் போராடி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தக் கொடுமையை அறிந்த, அப்போது லாகூர் பல்கலைக் கழகத்தில் தேசிய கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பகத் சிங், சுக்தேவ் தாபர், சந்திரசேகர ஆசாத், ஷிவ்ராம் ராஜகுரு எனும் நான்கு மாணவர்கள் லாலாஜியைக் கொன்றதற்கு பழிவாங்க வேண்டுமென்று உறுதி எடுத்துக் கொண்டனர்.

சுவாமி விவேகானந்தர் பார்வையில் மதமாற்றம்

பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணர் பரம்பரையில் வந்த துறவி;  சுவாமி மதுரானந்தரிடம் தீட்சை பெற்றவர். குமரி மாவட்டம், வெள்ளிமலையில் உள்ள ஸ்ரீ விவேகானந்த ஆசிரமத்தின் தலைவர். குமரி மாவட்டத்தில் மாபெரும் ஹிந்து விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுவாமிஜி,  தமிழகம் முழுவதும் ஹிந்து சமய வகுப்புகளை  - அதற்கென ஒரு பாடத்திட்டம் உருவாக்கி -  நடத்தி வருகிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது இனிய கட்டுரை இங்கே…

பாஞ்சாலி சபதம்- 1.2.3

மறுநாள் காலை அரச ஆடை புனைந்து, திருதராஷ்டிரன் அவைக்களத்தை ஏகுகின்றனர் பாணடவர்கள். அங்கு வீற்றிருப்போரைக் குறிப்பிடுகையில் ‘கேட்டினுக் கிரையாவான் -மதி கெடுந் துரியோதனன் கிளையினரும்’ சூழ்ந்திருப்பதைக் காட்டுகிறார் மகாகவி பாரதி...