பாஞ்சாலி சபதம்- 1.2.3

-மகாகவி பாரதி

மறுநாள் காலை அரச ஆடை புனைந்து, திருதராஷ்டிரன் அவைக்களத்தை ஏகுகின்றனர் பாணடவர்கள். அங்கு வீற்றிருப்போரைக் குறிப்பிடுகையில் ‘கேட்டினுக் கிரையாவான் -மதி கெடுந்  துரியோதனன் கிளையினரும்’ சூழ்ந்திருப்பதைக் காட்டுகிறார்  மகாகவி பாரதி...

முதல் பாகம்

1.2. சூதாட்டச் சருக்கம்

1.2.3. பாண்டவர் சபைக்கு வருதல்

பாணர்கள் துதிகூற-இளம்
      பகலவன் எழுமுனர்த் துயிலெழுந் தார்;
தோணலத் திணையில்லார்- தெய்வந்
      துதித்தனர் செய்யபொற் பட்டணிந்து
பூணணிந் தாயுதங் கள்- பல
      பூண்டுபொற் சபையிடைப் போந்தனரால்;
நாணமில் கவுரவரும்- தங்கள்
      நாயக னொடுமங் வீற்றிருந்தார்.       162

வீட்டுமன் தானிருந் தான்;-அற
      விதுரனும், பார்ப்ப்பனக் குரவர்களும்,
நாட்டுமந் திரிமாரும்,-பிற
      நாட்டினர் பலபல மன்னர்களும்
கேட்டினுக் கிரையாவான்- மதி
      கெடுந்துரி யோதனன் கிளையின ரும்,
மாட்டுறு நண்பர்களும்- அந்த
      வான்பெருஞ் சவையிடை வயங்கிநின்றார்.       163

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s