–பி.ஆர்.மகாதேவன்
சட்டசபையில் தேவையே இன்றி, சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று மீண்டும் பேசி, வம்பு வளர்த்திருக்கும் உதவாக்கரையின் தாய்க்கு கனல் தகிக்கும் கவிதையை வேண்டுகோளாக முன்வைக்கிறார் கவிஞர் திரு. பி.ஆர்.மகாதேவன்…

அம்மா…
சந்தானத்தின் துணை நடிகனான
உங்கள் அன்பு மகனுக்கு
சநாதனம் என்றால் என்ன என்று கற்றுக்கொடுங்கள்.
அனுதினமும் செல்லும் ஆலயத்துக்கு
அருமை மகனையும் அழைத்துச் செல்லுங்கள்.
அதற்கு முன் செய்ய வேண்டியவற்றை
அன்புடன் கேளுங்கள்.
பின் தூங்கி முன் எழும் பத்தினியே,
அதிகாலையில் அவனையும் அடித்து எழுப்புங்கள்.
முந்தின நாள் குடித்ததில் மிஞ்சியிருக்கும் போதையை
முழு வாளித் தண்ணீர் ஊற்றி இறங்க வையுங்கள்.
(மறு நாளில் இருந்து
மாலையிலேயே வீடு திரும்பவைத்து
முன்னிரவுக்குள்ளேயே தூங்கப் பழக்குங்கள்…
ஹேப்பி ஸ்ட்ரீட்…
லேட் நைட் பார்ட்டி எல்லாம்
சநாதனம் அல்ல; சாத்தானியம் என்று புரிய வையுங்கள்).
அதிகாலையில் குளித்ததும்
அஞ்சுகம் அன்னையின்
அழகிய திரு உருவின் முன் ஆசி பெற வையுங்கள்.
முத்துவேலர் தரித்த திருநீறை
முழு நெற்றியிலும் பூசிவிடுங்கள்.
முன்னோரை வணங்குதல்
மூத்த குடியின் முதல் கடமை என்பதை
முரசொலியானுக்குப் புரிய வையுங்கள்.
அதன் பின் அழைத்துச் செல்லுங்கள் துளசி மாடத்துக்கு.
அதிகாலைச் சூரியனின் ஆதிக் கதிர்கள் பட்டு
பொன் மாடமாக மின்னும் காட்சியைப் பார்க்கட்டும்…
அது தரும் புத்துணர்வை உணரட்டும்.
புரைதீர்த்த போதை….
மூவலம் வந்து நீங்கள் முழங்கும் மந்திரங்களை
மூடக் காதுகளும் கேட்கட்டும்.
அவன் கை பற்றி அழைத்தபடி
அகத்து கோசாலைக்குச் செல்லுங்கள்.
கன்றை அவிழ்த்துவிட்டு
தாய் மடி முட்டுவதைப் பார்க்கச் சொல்லுங்கள்.
முலை என்பது தாய்மை என்பது புரியட்டும்.
யோனி வழிபாடென்பது
பெண்மையைப் போற்றும் பெரும் தத்துவம் என்று புரியவையுங்கள்.
சனாதன கோ மூத்திரத்தைச்
சற்றே கைகளைக் குவித்துப் பிடித்து
குடிக்க வையுங்கள்…
பகுத்தறிவுப் பகலவன் புத்தன்
தன் பிக்குகளுக்குப் பரிந்துரைத்த
பழம் பெரும் மருந்து இதுவே என்பதைச் சொல்லுங்கள்.
தமிழ் மரபின் சித்த வைத்தியம்
தலை மேல் தூக்கிக் கொண்டாடுவதும் இதுவே என்று சொல்லுங்கள்.
ஒட்டக மூத்திரம் குடிக்கச் சொன்ன அருளாளன் பற்றிச் சொல்லுங்கள்.
அவர் சொன்ன ஹதீஸை அர்த்தம் விளக்கிச் சொல்லுங்கள்.
பால்டாயில் குடித்த விஷத்தையும் போக்கும் பலம்
பசு மூத்திரத்துக்கு உண்டு என்று சொல்லுங்கள்.
சாணியிட்டு மெழுகிய இடங்களைக் காட்டி
சநாதன சானிடைஸர் இது என்று சொல்லுங்கள்.
மாக் கோலமிட்டு வைத்திருக்கும் வாசலைக் காட்டி
மண்ணுயிர்க்கான அன்பை போதியுங்கள்
ஆலயத்துக்கு அழைத்துச் செல்லும்போது
அகக்கண்ணைத் திறந்துவிடுங்கள்.
ஓங்கி உயர்ந்து நிற்கும் கோபுரத்தைக் காட்டி
ஒரு தலைமுறையின் போர்வெறியை
ஓரமாகத் தள்ளிவைத்த உன்னதக் கட்டுமானம் என்று சொல்லுங்கள்.
ஸ்த விருக்ஷத்தையும் கரையாத புற்றுகளையும் காட்டி
பூர்வ குடி மரபுகளையும் பேணும்
புனித மரபைப் புரியவையுங்கள்.
அகல் விளக்கின் ஒளியில்
கருவறைக்குள் மின்னும் தெய்வத்துக்கும்
வெளியில் நின்று வணங்கும் பக்தருக்கும் இருக்கும் இடைவெளி
ஆன்மிகத்தின் உச்சம் மட்டுமல்ல;
அழகியலின் உச்சமும் என்பதைப் புரியவையுங்கள்.
மூடிய திரை முன் காத்திருப்பதும்
திறந்ததும் தீப ஒளியில் தென்படும் திவ்யலங்கார பூஷிதமும்
காணக் கண் கோடி வேண்டுமே… இல்லையா?
ஆண்டவனுக்குச் செய்து கொடுத்த சத்தியமே
அர்ச்சகர் குலத்தை
அவருக்கு அருகில் அழைத்துச் செல்கிறதென்பதை
ஆற அமரப் புரிய வையுங்கள்.
*
அன்பு மகனுக்கு போதியுங்கள்
சமத்துவத்தை – கல்வியில், மருத்துவத்தில் கொடுக்க வேண்டும்…
சநாதனத்தை சன்னிதியில் பின்பற்ற வேண்டும்…
அரசியலுக்கான இடமல்ல ஆன்மிக நிலையங்கள்.
சட்ட சபைக்குள் சட்ட சபைக்கான விதிகள்!
ஆண்டவன் சன்னிதியில் ஆகம விதிகள்!
வெளியில் நின்று நான் வணங்குவதில்
வேதனை எதுவும் இல்லை.
தாத்தாவின் சமாதியில் யார் வேண்டுமானாலும்
தயிர் வடை சமர்ப்பிக்கலாம்.
உன் விருப்பப்படி நடக்கவேண்டுமா?
உன் வீட்டில் ஓர் ஆலயம் கட்டிக்கொள்.
நம் வீட்டு பூஜை அறையில் நாமே அர்ச்சகர்.
அமீரின் வீட்டுப் பெண்களுக்கு
அமீரின் வீடே மசூதி.
ஆகம விதிகள் பிடிக்கவில்லையா?
திறந்தவெளி தெய்வங்களைக் கும்பிடு.
*
ஜாதி இல்லாத இடம் எது?
கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவரல்லாதவரெல்லாம் கீழ் ஜாதி
முஸ்லிம்களுக்கு முஸ்லிம்கள் மட்டுமே மேல் ஜாதி
(உட்பிரிவுகளுக்குள் இருக்கும்
ஒடுக்குமுறையைப் பற்றித் தெரியவேண்டுமா?
உலக வரலாறைப் படி…
உடன்பிறப்புகளின் சகவாசத்தை விட்டொழி).
உன் கார் டிரைவருடன்
ஒரே மேஜையில் அமர்ந்து நீ உணவு உண்பதில்லை
உன் வீட்டுத் தோட்டக்காரரை
உன் மெத்தையில் தூங்க அனுமதிப்பதில்லை…
இவ்வளவு ஏன்…
நம் வீட்டு வேலைக்காரர் யாரையும்
நம் வீட்டு கக்கூஸைக் கூடப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை.
எல்லா இடங்களிலும் ஏற்றத் தாழ்வு உண்டு மகனே!
அளவோடு இருந்தால்
எல்லா அடக்குமுறையையும் அனுமதிக்கலாம்.
ஆறுக்கும் கரை உண்டு.
வயலுக்கும் வரப்பு உண்டு.
உறவுக்கும் எல்லைகள் உண்டு.
உரிமைக்கும் ஒழுங்குகள் உண்டு.
மேடு பள்ளம் இல்லாத நாடு எது?
மேல் – கீழ் இல்லாத சமூகம் எது?
கட்டுப்படுத்தப்பட்ட ஏற்றத் தாழ்வு என்பது
போலி சமத்துவத்தைவிட மேலானது மகனே.
சநாதனம் என்றால்
சமரசம், சத்பாவம், சகிப்புத்தன்மை.
*
நீர் தேங்காத சாலைகள்…
பார் இல்லாத ஊர்கள்…
அதிகார துஷ்பிரயோகம் இல்லாத ஆட்சி…
அடிமட்டத் தொண்டனையும் அரசனாக்கும் கட்சி…
கமிஷன் இல்லாத திட்டம்…
கரப்ஷன் இல்லாத சட்டம்…
அரசியலை ஒழுங்காகச் செய்…
ஆன்மிகத்தை அவர்களிடம் விட்டுவிடு!
உன் துருத்தியை நீ ஒழுங்காக ஊது
அடுத்தவர் துருத்தியை அவர்களை ஊதவிடு.
சநாதனம் சொல்வது இதுவே!
வாழு வாழவிடு….
யார் வழியிலும் குறுக்கிடாதே…
யாருக்கான ஒளியையும் பறிக்காதே.
சமத்துவத்தை,
வீட்டில் இருந்து ஆரம்பி…
கட்சியிலிருந்து ஆரம்பி…
சநாதனத்தின் சாதனைகளைப் போற்றாதவனுக்கு
அதன் போதாமைகளைப் பேச அருகதை இல்லை
பாழாய்ப்போன போலிப் பகுத்தறிவு
பால்டாயிலை மோசமானது மகனே.
என் கழுத்தில் தழையத் தழையத் தொங்குவது
வெறும் தங்கத் தாலி அல்ல;
தன்னிகரற்ற சநாதனத் தாலி.
அந்த சநாதனம் மட்டும் இருந்திருக்கவில்லையென்றால்…
நானும் இல்லை,
நீயும் இல்லை,
நாம் யாருமே இல்லை அன்பு மகனே!
$$$