ஒரு ஹிந்துவின் மனக்குமுறல்

-பி.ஆர்.மகாதேவன்

அண்மையில் BLAST என்ற தமிழ்த் திரைப்படம் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. ஆங்கிலத்தில் அதை ‘வெடிப்பு’ என்று சொல்லலாம் :). அதை விட கடுமையான வெடிப்பை எழுத்தில் காட்டி இருக்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன். இதை மறுபதிவிடுவது நமது கடமையல்லவா?

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்டவேண்டும்?

இதன் அர்த்தம் என்ன?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

தமிழன் என்ற அடையாளத்தை வீட்டுக்குள் பூட்டிவிட்டுத்தான் வெளியே வருவேன். இந்தியன் என்ற அடையாளத்தைப் பூட்டிவிட்டுத்தான் வெளியே வருவேன் என்று ஏன் சொல்லவில்லை? ஏன் சொல்ல முடியாது?

இந்து அடையாளமான திலகத்தை வெளியில் தெரியும்படி வைக்க மாட்டேன் என்று சொல்பவர்களால், வேஷ்டி கட்டிக் கொண்டு வரமாட்டேன் என்று சொல்ல முடியுமா? சொன்னால் சரியாக இருக்குமா?

குல்லாவோ பர்தாவோ அணிந்துகொண்டு வராதீர்கள் என்று முஸ்லிம்களுக்குச் சொல்லும் ஆலோசனையா இது?  அப்படி பகிரங்கமாகச் சொல்லிவிட முடியுமா?

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தமது கிறிஸ்தவ அடையாளத்தை தந்திரமாக மறைத்துக்கொண்டுதான் செயல்படுகிறார்கள்.

ஈ.வெ.ரா. ஒருமுறை  “நாம் ஜாதிப் பெயரை நீக்கச் சொன்னது தவறாகப் போய்விட்டது. இன்று அப்படிப் பலரும் தமது பெயருக்குப் பின்னால் இருக்கும் ஜாதியை நீக்கிவிட்டதால் அவன் எந்த ஜாதி என்பது தெரியாமல் போய்விடுகிறது. இது பெரிய சிக்கலைத் தருகிறது” என்பதாக ஒருமுறை புலம்பியிருந்தார். அவர் அதனால் தான் யாரைப் பார்த்தாலும் என்ன ஜாதி என்பதை கேட்டுவிட்டே பேச ஆரம்பித்தார்.

கெளரவமாக நினைப்பவர்கள், தம் அடையாளத்தை மறைக்கத் தேவையில்லை.

தந்திரவாதிகள் யாரும், சொல்லாமலே அப்படித்தான் செய்கிறார்கள்.

நாம் நம் அடையாளத்தை இழிவாக நினைக்க வேண்டியதில்லை.

கிறிஸ்தவர்களைப் போல தந்திரமாக மறைத்துக் கொள்ளவும் தேவையில்லை.

*

இந்து மதத்தை வீட்டுக்குள் பூட்ட வேண்டும் என்று சொன்னதன் அர்த்தம் அது அல்ல; அரசியலிலும் பொது வாழ்க்கையிலும் மதத்தைக் கலக்கக் கூடாது என்ற உயரிய எண்ணத்தில் சொல்லப்பட்டதாக இதை எடுத்துக்கொள்ளலாம் தான்.

ஆனால், விஷயம் என்னவென்றால், அந்த உயரிய நோக்கம் நம் அரசியல் சாசனத்துக்கே கிடையாது.

அரசியலில் மதத்தைச் சேர்க்கக் கூடாதென்றால் முதல் வேலையாக சிறுபான்மைச் சலுகையை மதத்தின் பெயரால் தருவதை நிறுத்தியாக வேண்டும்.

அரசியலில் மதம் கலந்திருப்பதன் அப்பட்டமான, அராஜகமான, அபாயகரமான சான்று, இந்த சிறுபான்மை மதச் சலுகையே.

1947-இல் ஒரு வழிபாட்டு மையம் எப்படி இருக்கிறதோ அந்த நிலையை மாற்றாமல் தக்கவைக்க வேண்டும் என்பது ஒரு விதி. இது மதச் சமநிலையைத் தக்கவைக்க முன்னெடுக்கப்பட்டது. ஆனால், ஒரு வழிபாட்டு மையத்துக்கு இருந்த பாதுகாப்பு இந்துக்களுக்குத் தரப்படவில்லை. அதாவது 1947-இல் ஒருவர் எந்த மதத்தவராக இருக்கிறாரோ அது அப்படியே தொடர வேண்டும் என்று எந்தச் சட்டமும் போடப்படவில்லை.

முதலாவதில் இந்துவுக்கு, இடிக்கப்பட்ட அவர்களுடைய கோவில்களை மீட்கும் வழி மூடப்பட்டது. இரண்டாவதில், கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு குல தெய்வக் கோயில்களை  ‘இடிக்கும்’ உரிமை தரப்பட்டது.

ஒரு சர்ச், மசூதி புதிதாகக் கட்டப்படுகிறதென்றால், அது ஒரு குல தெய்வக் கோயிலின் செங்கல்லை உருவித்தான் கட்டப்படுகிறது.

இந்துவுக்கு இரட்டை தூக்கு தண்டனை இந்து என்பதால் தரப்பட்டிருக்கிறது. மதம் அரசியலில் கலந்ததால் ஏற்பட்டிருக்கும் அபாயம் இது.

ஜாதிக் கொடுமையால்தான் மதம் மாறுகிறார் என்ற பொய்யை, அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் அமலில் இருக்கும்போதும் சொல்வது மகா கேவலம்;பச்சை அயோக்கியத்தனம்.

இந்தியாவில் மத மாற்றம் அதிகமாக நடந்த வடகிழக்கு மாநிலங்களில் ஜாதி – வர்ணாஸ்ரமம் கிடையாது. அது மிகுதியாக இருந்த கோமாதா மாநிலங்களில் மத மாற்றம் மிக மிகக் குறைவு.

கண்ணுள்ளவர்கள் பார்க்கட்டும். காதுள்ளவர்கள் கேட்கட்டும்.

உண்மையில் இந்துக்கள் எல்லாரும் நாம் இந்துக்கள் என்று இந்து உணர்வு கொள்ள வேண்டிய நேரத்தில், இந்துவாக இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தலைவர்கள் இந்து அடையாளத்தை வீட்டுக்குள் பூட்டி வைப்பதென்பது இந்துவுக்கும் இந்தியாவுக்கும் செய்யும் நன்மை அல்ல.

*

அனைவரையும் சமமாகப் பார்ப்பவர் இந்து.

புதிது புதிதாக விளக்க உரைகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

இந்துக்களை மதம் மாற்றி, இந்து மதத்தை அழிப்பதே இலக்கு என்று சொல்லும் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் இந்துவுக்கு எப்படிச் சமமாக இருக்க முடியும்? ஒரு இந்து எப்படி, எதனால் அவர்களைத் தனக்கு சமமாகப் பார்க்க வேண்டும்?

பசுக்களும் விலங்குதான். ஓநாயும் விலங்குதான். ஆனால், எல்லா விலங்குகளும் சமமா?

எளிய கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நல்லவர்கள். அடிப்படைவாதிகள் மட்டுமே கெட்டவர்கள்.

இதையாவது வெளிப்படையாகச் சொல்லலாம் அல்லவா?

மதம் மாற்றும் அயோக்கியர்களை நான் சமமாக மதிக்க மாட்டேன்; எந்த இந்துவும் அவர்களைச் சமமாக மதிக்கவும் தேவையில்லை என்றுதானே சொல்ல வேண்டும்?  

மலின அரசியல் பேசும்போது, ஏன் ஆன்மிக, அறம் பேசுவது போன்ற தோரணை? அனைவரையும் சமமாகப் பார்ப்பது போன்ற பம்மாத்து எதற்கு?

எளிய மக்களைக் காப்பதும் கொடிய திருடர்களைத் தண்டிப்பதும் காவலரின் கடமை. எல்லாரையும் அன்பாக நடத்துவேன் என்பது, திருடர்களுடன் கள்ளக் கூட்டணி வைத்திருப்பவரின் வாக்குமூலம்.

அடிப்படைவாதிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவரென்றாலும் கண்டிப்பேன். அப்பாவிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவரென்றாலும் அரவணைப்பேன்.

-இதைச் சொல்லும் நேர்மையும் துணிச்சலும் எந்த அரசியல்வாதிக்கும் ஏன் வருவதில்லை?

அடிப்படைவாதிகளை எதிர்க்கத் துப்பில்லாதவர்கள் அப்படி என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும்? அப்படி அடிப்படைவாதிகளுக்குக் கூழைக் கும்பிடு போட்டு நடத்தும் அரசியல் இயக்கம் என்ன நன்மையைச் செய்துவிட முடியும்?

மத மாற்றத்தை சரி என்று சொல்லும் பாதிரியே நம்பர்ஒன் அடிப்படைவாதி;  மெளல்வியே நம்பர் டூ அடிப்படைவாதி.

இந்த இரண்டு கும்பலும் அனைவரையும் சமமாக ஒருபோதும் பார்க்காது. குறிப்பாக இந்துக்களைப் பார்க்காது. இந்து மட்டும் எதற்காக இந்த அடிப்படைவாதிகளை  சமமாகப் பார்க்க வேண்டும்?

*

மாநாட்டில் எங்குமே காவி நிறம் இல்லை; எங்குமே பச்சையும் இல்லை; எங்குமே தேசியக் கொடியையும் காணவில்லை. எங்கு பார்த்தாலும் பாதிரிப் பிரேத வெள்ளை.

இந்தியன் என்பதில் பெருமிதம் என்ற முழக்கத்தின் அர்த்தம் என்ன..?

எந்த இந்தியா..? காவிக்கு இடமில்லாத இந்தியாவா?

எந்த அழைப்பும் அறிவிப்பும் இன்றியே காவியைக் கைவிட்டுக் கூடியிருக்கிறார்களா அத்தனை பேரும்?

இப்படி இந்து அடையாளங்களை வீட்டுக்குள் பூட்டி வைத்துக்கொள்ளும் இந்தியா, இந்துக்களுக்கு மட்டுமல்ல; யாருக்குமே நன்மை தந்துவிட முடியாது. ஏனென்றால், இந்தியாவில் இருப்பவர்களில் தமது மதத்தை வீட்டுக்குள் பூட்டி வைக்கும் ஒரே தரப்பு இந்துத் தரப்பு மட்டுமாகவே இருக்கும்.

ஒரு முஸ்லிம் தன் அடையாளத்தை எங்கும் மறைத்துக்கொள்ள மாட்டார். ஒரு கிறிஸ்தவர் தன் அடையாளத்தை வீட்டுக்குள் பூட்டிவைக்க மாட்டார். தன்னுடனேதான் கொண்டு செல்வார். ஆனால், ஒளித்துக்கொள்வார்.

எனவே இந்து மட்டுமே அப்பாவியாக தன் அடையாளத்தை வீட்டுக்குள் போட்டுவிட்டு நடுத்தெருவுக்கு வருவார். இந்து அடையாளத்தைப் பூட்டி வைத்தால் அங்குதான் நிற்கவும் வேண்டிவரும்.

ஸ்டாலின், திருமாவெல்லாம் நெற்றியில் இட்டுவிடும் திருநீறை கேமராவுக்கு முன்பாக நின்று அழிப்பார்கள்.  ‘வீட்டைவிட்டு வெளியே வரும்போது நானே இந்து அடையாளத்தை அழித்துவிட்டுவருவேன்’ என்று சொல்வது கிட்டத்தட்ட அதற்கு இணையானதுதான்.

ஒருவருக்கு பாஜகவுடன் கோபம் இருக்கலாம். காவியுடன் எதற்கு விலகல்?

*

இந்துக்களே…

இந்து அடையாளத்தை வீட்டுக்குள் பூட்டி வைக்காதீர்கள்.

நீங்கள் இந்து என்பது உங்களைப் பார்த்தாலும் தெரிய வேண்டும்; பழகினாலும் தெரிய வேண்டும்.

மதத்தை அரசியலில் இருந்து நீக்க வேண்டுமென்றால், மதங்களின் பெயரிலான சிறுபான்மைச் சலுகையை இந்த நிமிடமே ரத்து செய்ய ரத்தத்தில் கையெழுத்திடுங்கள்.

இந்து அடையாளத்தை மறைத்துக் கொள்வதென்பது, உயிரை மாய்த்துக் கொள்வது போன்றது.

வெள்ளை ஆடை போர்த்திய பிணமாக வேண்டாம். காவியே நம் உயிர்.

அதை ஒருபோதும் நாமே பறித்துக்கொள்ள வேண்டாம்.

பாரத் மாதா கி ஜே!

ஜெய் ஹிந்த்!

ஜெய் ஸ்ரீராம்!

ஹர ஹர மஹாதேவ்!

வெற்றி வேல், வீர வேல்!

இந்து இருக்கும் இடத்தில் இந்த கோஷங்கள் முழங்கியாக வேண்டும்.

பாஜக என்ற கட்சியை எனக்கு நேற்றிலிருந்துதான் தெரியும் – வகையறாக்களிடம் பேச ஓர் இந்துவுக்கு என்றுமே எதுவுமே இருந்ததில்லை.

மற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள்.

ஆனால் இந்துவாகவே இருங்கள்.

$$$

Leave a comment