சங்கரநயினார் கோயில் என்று பெயர் பெற்ற இத்தலமே சங்கரன்கோவில் என்று அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முச்சிறப்புகளை உடைய தலம்; தென்காசி, விருதுநகர் மாவட்ட பஞ்சபூதத் தலங்களில் மண்ணுக்குரிய தலம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில் இது.