உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறிக்கை

திருப்பரங்குன்றம் மலையுச்சியில் உள்ள தீபத் தூணில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் கூட, கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. மாறாக, சென்ற ஆண்டைப் போலவே உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் இந்த ஆண்டும் கார்த்திகை தீப நாளில் (நவ. 24) தீபம் ஏற்றப்பட்டது. இதனால், கோயில் முன்பாக கூடிய இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருவிழாக்கள், பூஜைகள், வழிபாட்டுச் சடங்குகள் மற்றம் கார்த்திகை தீபத்திருவிழா ஆகியவை பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வரும் சமய மரபுகள், பராம்பரியப் பழக்க வழக்கங்கள் மற்றும் ஆகமவிதிகளின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக திருக்கோயிலில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தின்படி மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இவ்விடமான மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகின்றது.
இத்தகைய நீண்ட காலத்தொடர்ச்சியான வழிபாட்டு நடைமுறைகள் சமய மரபுகள் மற்றும் சடங்குகள், ஆகம விதிகள் ஆகியவை கோயிலின் தனித்துவமான சமய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. நமது கோயிலில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள். ஆகம விதிமுறைகள் மற்றும் நிலைபெற்ற வழிபாட்டு நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும், அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும் சமய முக்கியத்துவம் கொண்ட ஆவணங்கள், ஆகமச்சான்றுகள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றுவதற்கும் அதைத்தொடர்ந்து திருக்கோயில் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும் இத்திருக்கோயில் அறங்காவலர் குழு ஏகமனதாக தீர்மானித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேற்கண்ட அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி கார்த்திகை மகாதீபமானது கோயில் மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இடமான மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் இன்று 24.112026 மாலை 06.00 மணியளவில் ஏற்றப்பட்டது. என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாவட்ட ஆட்சியரும் இந்து அறநிலையத் துறையும், திருக்கோயில் அறங்காவலர்கள் மீது பழிபோட்டு தப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் இவர்களின் முயற்சி உச்ச நீதிமன்றத்தில் செல்லாது.
$$$
One thought on “திருப்பரங்குன்றம் தீபம்: கோயில் நிர்வாகம் அநியாய விளக்கம்”