திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நவ. 17இல் தொடங்கியுள்ளது. கார்த்திகை தீபம் நெருங்கி வரும் சூழலில், இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை மாநில அரசுகள் பார்த்துக் கொள்ளும் என்றாலும், நீதிமன்ற உத்தரவுகளால் அப்பகுதியில் அமைதி சீர்குலைந்து விடவோ, எவ்வித சலசலப்பும் ஏற்பட்டு விடவோ கூடாது எனவும் தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது.