தமிழகத்தின் ஜீவநதியான காவிரியின் துணையாறு அமராவதி. இந்த நதிக்கு தீப ஆரத்தி திருவிழாவை அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் சிறப்புற நடத்தி வருகிறது. ஆறுகளைப் பாதுகாக்கும் மக்கள் இயக்கத்திற்கான முதல்படியாகவே, இந்த ஆரத்தி விழாக்களை துறவிகள் முன்னெடுத்து, மக்களை பக்தியால் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.
Category: செய்தி
நதிநீர் இணைப்புக்கு குரல் கொடுப்போம்!
தாராபுரத்தில் செப். 8ஆம் தேதி நடைபெற்ற ’அமராவதி ஆரத்தி திருவிழா’வின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்து மக்கள் கட்சியின் தமிழகத் தலைவர் திரு. அர்ஜூன். சம்பத் அவர்களது உரையின் சுருக்கமான தொகுப்பு…
நீரின்றி அமையாது உலகு
தாராபுரத்தில் செப். 8ஆம் தேதி நடைபெற்ற ’அமராவதி ஆரத்தி திருவிழா’வின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பாஜக தமிழக துணைத் தலைவர் பேரா. ப.கனகசபாபதி அவர்களது உரையின் சுருக்கமான தொகுப்பு…
ஆறுகள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும்!
தாராபுரத்தில் செப். 6,7, 8 தேதிகளில் நடைபெற்ற ‘அமராவதி ஆரத்தி திருவிழா’வின் நிறைவாக நடைபெற்ற துறவியர் மாநாட்டில், அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் சார்பில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன....
அமராவதித் தாயை வணங்குவோம்!
தாராபுரத்தில் செப். 6ஆம் தேதி நடைபெற்ற ’அமராவதி ஆரத்தி திருவிழா’வில் கலந்துகொண்டு பேசிய பாஜக தமிழக பொதுச் செயலாளர் பேரா. இராம.ஸ்ரீநிவாசன் அவர்களது உரையின் சுருக்கமான தொகுப்பு.
மதம் மாறினால் இந்து பட்டியலின அந்தஸ்து கிடையாது: உச்ச நீதிமன்றம் உறுதி
மதம் மாறிய பிறகு இந்து பட்டியலின சலுகையையும், அந்தஸ்தையும் இழக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான இரு செய்திகள் இங்கே…
கரூர் வெண்ணைமலை கோயில் நில வழக்கு – சில தகவல்கள்
கரூர் கோயில் நிலங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான கருத்துகளையும் உத்தரவுகளையும் வழங்கியுள்ளது. ஆனால், அவை தற்போது சர்ச்சைக்குரியதாக உள்ள புதிய HR&CE அரசாணையை நேரடியாகப் பற்றிய இறுதித் தீர்ப்பு அல்ல.
மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. சலுகையா? உச்ச நீதிமன்ற வழக்குகள் சில…
‘சூடான ஐஸ்கிரீம்’ சுவைத்திருத்திருக்கிறீர்களா? வாய்ப்பில்லை. ஆனால், தீண்டாமையைக் காரணம் காட்டி, இந்து மதத்தை வெறுத்து பிற மதத்திற்கு மாறிய பின்னரும் எஸ்.சி., எஸ்.டி, சலுகைகளைப் பெறும் தந்திரசாலிகளைப் பார்க்கும் போது, சூடான ஐஸ்கிரீம் தான் நினைவுக்கு வருகிறது. இதனை உச்ச நீதிமன்றம் கண்டித்து வருவது ஒன்று தான் இப்போதைக்கு ஆறுதல். இது தொடர்பான 3 வெவ்வேறு வழக்குகள் தொடர்பான செய்தி ஆவணங்கள் இங்கே…
மதம் மாறியவர் ஜாதி சான்றிதழ் கோர முடியாது: முக்கியமான தீர்ப்பு
‘சூடான ஐஸ்கிரீம்’ பார்த்திருக்கிறீர்களா? வாய்ப்பில்லை. ஆனால், இந்து மதத்திலிருந்து பிற மதத்திற்கு மாறிய பின்னரும் எஸ்.சி., எஸ்.டி, எம்.பி.சி, பி.சி. போன்ற ஜாதிச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு வழிவகுக்கும் நமது செக்யூலர் அரசுகளின் கிறுக்குத்தனமான ஆணைகள், சூடான ஐஸ்கிரீமைத் தான் நினைவு படுத்துகின்றன. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை அமர்வு) அளித்துள்ள தீர்ப்பு (26.06.2026) காலத்தே கிடைத்த சட்ட வழிகாட்டுதல் எனில் மிகையில்லை. அது தொடர்பான இரு செய்தி ஆவணங்கள் இங்கே...
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் கோயில் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்: அரசின் நிலைப்பாடு என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்த (புதிய) மாநில அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
திருப்பரங்குன்றம்: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்துக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
விஜயபாரதம் பிரசுரம் ஆண்டுவிழாவில் நால்வருக்கு விருது!
சென்னையில் ஏப்ரல் 26ஆம் தேதி மாலை நடைபெற்ற விஜயபாரதம் பிரசுரம் ஆண்டுவிழாவில், மூத்த எழுத்தாளர் சோ.தர்மன் உள்பட எழுத்தாளர்கள் நால்வருக்கு விருது வழங்கப்பட்டது.
உவேசா விருது பெறும் வாழ்நாள் சாதனையாளர் திரு. சோ.தர்மன்: வாழ்க்கைக் குறிப்பு
விஜயபாரதம் பிரசுரம் 2024ஆம் ஆண்டுமுதல், சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. தமிழ் எழுத்துத் துறையில் சாதனையாளராக இயங்கி வருபவர்களுக்கு அமரர் உ.வே.சாமிநாத ஐயர் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அவரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு இது…
பாரதி விருது பெறும் சிறந்த எழுத்தாளர் Dr. ஜெயஸ்ரீ சாரநாதன்: வாழ்க்கைக் குறிப்பு
தஞ்சையைப் பூர்விகமாகக் கொண்டு, ஒசூரில் வளர்ந்து, தற்போது சென்னையில் வாழும் முனைவர் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள், விஜயபாரதம் பிரசுரத்தின் இந்த ஆண்டுக்கான பாரதி விருது பெறும் எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர், ஜோதிட ஆராய்ச்சியாளர், பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர் இவர்.