திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிக்க தடை

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் அவமதிப்பு வழக்குக்களை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு (ஏப். 8) உத்தரவிட்டுள்ளது.

ஆட்சியர் மீண்டும் மன்னிப்பு; அமைச்சர் ரகுபதிக்கு நீதிபதி கண்டிப்பு

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மார்ச் 2ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, மதுரை ஆட்சியர், மலையுச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றாததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இந்த விவகாரத்தில் வீம்பான கருத்துகளைத் தெரிவித்த அமைச்சர் ரகுபதியை நீதிபதி கண்டித்தார். வழக்கு மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சில ஊடகச் செய்திகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன…

நீதிபதிக்கு எதிரான புத்தகம்: பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்ற (மதுரை அமர்வு) நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட புத்தகத்தை பறிமுதல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் (சென்னை அமர்வு) ஜன. 7இல் உத்தரவிட்டது.