-ஆசிரியர் குழு
விஜயபாரதம் பிரசுரம் வழங்கும் சிறந்த பதிப்பாளருக்கான பாரதி விருது இந்த ஆண்டு ரேர் பதிப்பகத்திற்கு வழங்கப்படுகிறது. அதுகுறித்த சிறுகுறிப்பு…

திருவாளர்கள் ஸ்ரீதர் கிருஷ்ணசாமி, எஸ். ரங்கநாதன் ஆகியோர் இணைந்து 2013 மே 12 அன்று சென்னையில் நிறுவிய பதிப்பகம் தான், ரேர் பப்ளிகேஷன்ஸ் (RARE Publications). தொடக்கத்திலிருந்தே, ‘ரேர்’ ஒரு தனித்துவமான தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. நடுநிலையான ஆய்வில் வேரூன்றிய, முதன்மைச் சான்றுகளால் நிரூபிக்கப்படும் ஆராய்ச்சி நூல்கள், பாரதப் பண்பாட்டு நெறிகளைப் பாதுகாப்பதற்கான அரிய நூல்களை வெளியிடுவதே ரேரின் தனித்துவம்.
இப்பதிப்பகத்தின் முதல் நூல், திரு. எம்.ஆர்.வெங்கடேஷ் எழுதிய Dr. Manmohan Singh — A Decade of Decay (டாக்டர் மன்மோகன் சிங் – ஒரு பத்தாண்டுகாலச் சிதைவு). இந்நூல், உண்மைத் தகவல்கள், வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். அன்றுமுதல், ரேர் பதிப்பகம், வரலாறு, அரசியல், கலாச்சாரம், சமூகம் ஆகிய கருப்பொருள்களை உள்ளடக்கி, ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் 43 நூல்களை வெளியிட்டுள்ளது.
ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் வாசகர்களைச் சென்றடைவதற்காக, ரேர் பதிப்பகம், ஆதாரம் வெளியீடு (தமிழ்), ஆதார் பிரகாஷன் (ஹிந்தி) என இரண்டு துணைப் பதிப்புகளை (இம்பிரின்ட்ஸ்) இயக்குகிறது.
‘RARE’ பதிப்பகத்தின் முதன்மையான பங்களிப்பு, மூன்று தொகுதிகளைக் கொண்ட ‘திராவிட மாயை’ நூலாகும். மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் திரு சுப்பு (எ) வா.ர.பாலசுப்பிரமணியம் எழுதிய நூல் இது; திராவிட அரசியலுக்கு சவால் விடும் முன்னோடிப் படைப்பான இந்நூல், தற்போது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது ஆங்கிலத் தொகுதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
திராவிட இயக்கம் குறித்த கட்டுக்கதைகளைத் தகர்த்தெறிந்து, தமிழரின் அடையாளம், பண்பாடு, வரலாறு, அரசியல் குறித்த புதிய விவாதங்களைத் தொடங்கிவைத்து, தமிழ்ச் சமூகத்திற்கும் ஒட்டுமொத்த பாரதத்திற்கும் ஆய்வுக் கண்களைத் திறக்கும் படைப்பாக ‘திராவிட மாயை’ உருவெடுத்துள்ளது. இன்றைய அரசியல் களத்தில் ஒரு முக்கியமான மேற்கோள் புத்தகமாக ‘திராவிட மாயை’ விளங்குகிறது.

ஆராய்ச்சி சார்ந்த இத்தகைய பண்பாட்டு ஆய்வுகளின் மரபுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில், ‘RARE’ பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடான ‘கதா சாகர்’ (2 தொகுதிகள்), ஆன்மிகமும் வரலாறும் சங்கமிக்கும் இலக்கியத் துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது. ‘விஷ்ணு சஹஸ்ரநாமம்’ நூலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்நூல், மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் ஒவ்வொன்றின் பொருளையும் தெளிவுபடுத்தும் வரலாற்றுச் கதைகளின் வாயிலாக, அவற்றை விளக்குகிறது; இதன்மூலம் பக்தி, வரலாறு, கதைவளத்தை ஒருங்கே இணைக்கிறது.
RARE பதிப்பகத்தை வேறுபடுத்திக் காட்டுவது அதன் ஆசிரியர் குழு கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடுகள் ஆகும். நாட்டில் திட்டமிட்டோ, தவறுதலாகவோ பரப்பப்பட்டிருக்கும் செல்வாக்கு மிகுந்த இடதுசாரி கருத்துருவாக்கங்கங்களுக்கு சவால் விடும் வகையில், மறைக்கப்பட்ட உண்மைகளை ஆவணப்படுத்தி, வாசகர்களுக்கு உண்மைத் தெளிவை வழங்கும் புனைவல்லாத படைப்புகளை முன்வைப்பதில் இதன் பதிப்பாளர்கள் கொண்டுள்ள உறுதி பாராட்டுக்குரியதாகும். அறிவார்ந்த உரையாடலைத் தூண்டுவதற்கும், நவீனத்துவம் என்ற பெயரில் நெருக்கடிக்குள்ளாகும் பாரம்பரிய மரபுகளைப் பாதுகாப்பதற்கும் இப்பதிப்பகத்தின் ஒவ்வொரு வெளியீடும் முனைகிறது.
எழுத்தில் நுண்மான் நுழைபுலம், நேர்மை, துணிவு, நம்பகத்தன்மையைக் கொண்ட எழுத்தாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றி, இந்தியப் பதிப்புத் துறையில் ஒரு தீவிரமான அறிவுசார் குரலாக RARE பதிப்பகம் இன்று தன்னை நிலைநிறுத்தியுள்ளது. தனது அரிய நூல் வெளியீடுகள் மூலமாக, விமர்சன சிந்தனைக்கு மதிப்பளிக்கும் ஒரு வாசகர் வட்டத்தை வளர்க்கவும், கலாச்சாரப் பாதுகாப்பு, அறிவுசார் பாதுகாப்புப் பணியைத் தொடரவும் RARE பதிப்பகம் தொடர்ந்து பணி புரிகிறது.
பதிப்பித்துள்ள நூல்கள்:
| Towards a Caste Free India – KC Kulaindasamy |
| Work is Worship – Nalli Kuppuswami Chetti |
| How to Build Business – Nalli Kuppuswami Chetti |
| The Kural – Dr.R. Natarajan |
| Modi’s Idea of India – Saravanan Thangadurai |
| Unveiling the Secrets of Indian Psycology – Dr.Lakshmi.T.K |
| Tipu Sultan-Tyrant of Mysore – Sandeep Balakrishna |
| Rise and Fall of AAP- Sree Iyer |
| NDTV Frauds – Sree Iyer |
| NDTV Frauds V2.0- The Real Culprits – Sree Iyer |
| Dr.Manmohan Singh-A Decade Of Decay – M.R.Venkatesh |
| Dravidian Maya – Vol.1 – Subbu |
| Brihdhi Vidya – The Indian Psychotherapy – Dr.Lakshmi.T.K |
| Brahmin Genocide: The Precursor to Hindu Extinction – Asi-Mahalingam Balaji |
| Reviving Hinduism – Prakasrao Velagapudi |
| Truths 500 years Europeon Christians in History – Prodosh Aich & MVR Nair |
| Dravidian Maya – Vol.2 – Subbu |
| Dalals – R.V.S.Mani |
| India UnInc – Prof. R. Vaidyanathan |
| Governance of The Self – Advocate Amber Agarwal |
| Kathā Sāgar : Stories from Vishnu Saharsanam – Vol1 – Lakshminarayana Bhat |
| Kathā Sāgar : Stories from Vishnu Saharsanam – Vol2 – Lakshminarayana Bhat |
| Your Dharma and Mine – Hari Ravikumar |
| Musings of Hinduism – Nitin Sridhar |
| Yoga Nidra – Dr.Lakshmi.T.K எது நல்ல நடத்தை? ஆசாரக்கோவை – ஆர்.நடராஜன் எவன் மனிதன்? ஏலாதி – ஆர்.நடராஜன் மணிமணியாக – நான்மணிக்கடிகை – ஆர்.நடராஜன் நேஷனல் ஹெரால்ட் சொத்தும் சோனியாவும் – ஆர்.நடராஜன் காஷ்மீர் 370 – ஒரு வரலாற்றுப் பிழை – ஆர்.நடராஜன் ஊழல் நாம் பிறப்புரிமை – துக்ளக் சத்யா நடந்தாய் வாழி சிட்டி – கி.வீரராகவன் ஆண்டாள் தமிழும், அறியாத வைரமுத்துவும் – ஜெயஸ்ரீ சாரநாதன் தங்கப்ப தக்கம் – சுப்பு வன மகா உற்சவம் – என்.எஸ்.கே.பத்மினி காசுக்காக தேசத்தை – எம்.ஆர்.வெங்கடேஷ் / ஆர்.நடராஜன் பாரதம்- நேற்று – இன்று – நாளை. – பி.ஆர்.மகாதேவன் ஆறங்கம் – அரசியல் நாவல் – ஆர்.நடராஜன் தமிழ்க் கடல்மணி – திருச்சி புலவர் இரா.ராமமூர்த்தி கிரிக்கெட் சோறு போடுமா? – ச.பகவதிபிரசாத் யாருக்காக இந்தியா? – ஆர்.நடராஜன் சில பயணங்கள் சில பதிவுகள் (முதல் பகுதி) -சுப்பு திராவிட மாயை: ஒரு பார்வை (மூன்று பகுதிகள்) – சுப்பு மற்றும் இரு ஹிந்தி நூல்கள். |
திரு. எஸ். ரங்கநாதன்
சங்ககிரியைப் பூர்வீகமாகக் கொண்ட திரு. எஸ்.வி.சௌந்தரராஜன் – ஜெயலட்சுமி தம்பதியின் மகனாக 1965 ஜன. 23-இல் பிறந்தவர் ரங்கநாதன். திருப்பூரில் மின்னணுவியலில் பட்டயப் படிப்பு படித்தவர். பிறகு ஏ.எம்.ஐ.இ. படித்தார். 1987 முதல் 2001 வரை, கிருஷ்ணா இன்ஃபோடெக், ஜெனித் கம்ப்யூட்டர்ஸ், ஃபிளிண்ட் டெக் போன்ற நிறுவனங்களில் நெட் ஒர்க்கிங் நிபுணராகப் பணியாற்றினார். 2001 முதல் 2012 வரை ஐசிஐசிஐ புரூடன்ஷியல் நிறுவனத்தில் மாநில அளவிலான அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
2013ஆம் ஆண்டு முதல் ‘ரேர் பப்ளிகேஷன்ஸ்’ என்ற பதிப்பகத்தை நிறுவி, அரிய நூல்களை வெளியிட்டு வருகிறார். தேசிய சிந்தனையுடன் கூடிய, நாட்டுநலனுக்கு உகந்த நூல்களை வெளியிட வேண்டும் என்ற தணியாத தாகமே, இவர் பதிப்புத் துறையில் கால் பதிக்கக் காரணம்.
ஜனசங்கக் காலத்தில் இருந்தே தேசிய அரசியல் பார்வையுடன் இயங்கி வரும் திரு. எஸ்.ரங்கநாதன், பாஜகவின் தீவிரச் செயல்பாட்டாளராக இருந்து வருகிறார். ‘தமிழ்நாடு வாசகர் வட்டம்’ மூலமாக நூல் விமர்சனக் கருத்தரங்குகளை திரு. சுப்புவுடன் இணைந்து நடத்தி வருகிறார்.
ஐ.மு.கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், னேஷனல் ஹெரால்டு ஊழல், நிலக்கரி ஊழல், ஏர்செல்- மேக்சிஸ் ஊழல்கள் தொடர்பாக ஆவணப்படுத்துதல் பணியில் ஈடுபட்டவர். பாரத கலாச்சாரம் தொடர்பான ஆய்வுகளுக்கு உதவும் வகையில் சிறப்பு ஆராய்ச்சி நூலகத்தையும் எண்மக் காப்பகத்தையும் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இவரது மனைவி பிரவீணா; ஒரு மகனும் மகளும் உள்ளனர். மனைவி பிரவீணா, ‘மைத்ரி பாடசாலா’ என்ற தனிக்கல்வி மையத்தை 2007 முதல் நடத்தி வருகிறார். இங்கு சமூகப் பார்வையுடன் கல்லூரி மாணவர்கள் ஏழைக் குழந்தைகளுக்கு தனிக்கல்வி கற்பிப்பது இதன் சிறப்பாகும். திரு ஸ்ரீதர் ராஜாராம் அவர்களால் 1992-இல் நிறுவப்பட்ட மைத்ரி கல்வி அறக்கட்டளை மூலமாக, மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவரது முகவரி:
திரு. எஸ்.ரங்கநாதன்,
ரேர் பதிப்பகம்,
#23, பெரியார் சாலை,
தியாகராய நகர்,
சென்னை – 600 017
போன்: 98410 72969
மின்னஞ்சல்: s.ranganaathan@gmail.com
$$$