-ஆசிரியர் குழு

விஜயபாரதம் பிரசுரத்தின் மூன்றாம் ஆண்டுவிழா, சென்னையில் 26.04.2026, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது. இடம்: தட்சிணாமூர்த்தி அரங்கம், பி. எஸ். மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூர், சென்னை.
இவ்விழாவில் சாஹித்ய அகாதெமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் திரு. சோ.தர்மன் அவர்கள் உவேசா வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார். மேலும், எழுத்தாளர்கள் திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் (சிறந்த எழுத்தாளர்), ஜனனி ரமேஷ் (சிறந்த மொழிபெயர்ப்பாளர்), ரேர் பதிப்பகம் திரு. ரங்கநாதன் (சிறந்த பதிப்பகம்) ஆகியோர் பாரதி விருது பெறுகின்றனர்.
கவிஞர் திரு. இசைக்கவி ரமணண், தினமலர் இணை ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு, ஆர். எஸ். எஸ். அகில பாரத செயற்குழு உறுப்பினர் திரு. வி.ரவிகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
நால்வருக்கு விருது:
இந்த ஆண்டு நடைபெறும் மூன்றாம் ஆண்டு விழாவில், கீழ்க்கண்ட எழுத்தாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்:
உவேசா வாழ்நாள் சாதனையாளர் விருது- 2026:
திரு. சோ.தர்மன், கோவில்பட்டி,
(சாஹித்ய அகாதெமி விருது பெற்ற முன்னோடி எழுத்தாளர்)
சிறந்த எழுத்தாளருக்கான பாரதி விருது- 2026:
முனைவர் ஜெயஸ்ரீ ஸாரநாதன், சென்னை
(மகாபாரதம், ராமாயணம் காலங்கள் குறித்த ஆராய்ச்சி நூல்களை எழுதியவர்)
சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான பாரதி விருது- 2026:
திரு. ஜனனி ரமேஷ், சென்னை
(ஜே.நந்தகுமார் எழுதிய ஹிந்துத்வம் – உள்ளிட்ட 15 நூல்களை மொழிபெயர்த்தவர்).
சிறந்த பதிப்பாளருக்கான விருது- 2026:
திரு. எஸ்.ரங்கநாதன்,
(ரேர் பதிப்பகம், சென்னை)
$$$
2024ஆம் ஆண்டு விருது பெற்றோர்:
சிறந்த எழுத்தாளருக்கான பாரதி விருது- 2024:
திரு. பத்மன் (எ) நா.அனந்தபத்மநாபன், சென்னை
சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான பாரதி விருது- 2024:
திரு. செ.அருட்செல்வப்பேரரசன், சென்னை
2025ஆம் ஆண்டின் விருது பெற்றோர்:
உவேசா வாழ்நாள் சாதனையாளர் விருது- 2025:
திரு. கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள், சென்னை
சிறந்த எழுத்தாளருக்கான பாரதி விருது- 2025:
திரு. ம.வெங்கடேசன், சென்னை
(‘எம்.சி.ராஜா: மறைக்கப்பட்ட மாபெரும் ஆளுமை’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர்).
சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான பாரதி விருது- 2025:
திரு. B.R.மகாதேவன், சென்னை
(திரு. தரம்பாலின் ‘அழகிய மரம்’ உள்ளிட்ட நூல்களை மொழியாக்கம் செய்தவர்).
சிறந்த பதிப்பாளருக்கான பாரதி விருது- 2025:
திரு. ஹரன் பிரசன்னா,
சுவாசம் பதிப்பகம், சென்னை.
$$$
4 thoughts on “விஜயபாரதம் பிரசுரம் ஆண்டு விழா: திரு. சோ.தர்மன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்!”