திருப்பரங்குன்றம் தீப வழக்கு திருமுருகன் திருவருளால் அதிரடியான திருப்பம் கண்டுவிட்டது. மலையுச்சியில் ஒருமுறை தீபம் ஏற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை ஆணவத்துடன் மீறிய தவெக அரசு, நீதியின் முன்பு தலை குனிந்து நிற்கிறது. இறுதியாக, இப்போது, திருப்பரங்குன்றம் மலையுச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை (நவ. 28ஆம் தேதி) கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும், அதற்கு உதவும் வகையில் சி.ஆர்.பி.எஃப். மத்தியப் படைகள் திருப்பரங்குன்றம் மலையின் பாதுகாப்பை ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.