ஜனநாயகத்தில் பொதுக்கருத்து உருவாக்கம் மிகவும் முக்கியமானது. அந்த இடத்தை ஆக்கிரமிக்கவே சதிகாரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை அவர்களால் வெல்ல முடியவில்லை. அதற்காக நாம் பொறுமை காக்கக் கூடாது. அதுவும் வெளிநாட்டு சக்திகள் மறைமுக ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் நல்லோரின் அமைதியும் நிதானமும் சதிகாரர்களுக்கு வாய்ப்பாகிவிடும். இதுவே கரப்பான்பூச்சிகள் நமக்கு அளித்திருக்கும் படிப்பினை.