தவெக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் தவெக அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். இது காலத்தின் தேவையாகும்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை: பக்தர்கள் ஏமாற்றம்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோயிலில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் எச்சரித்தும், நீதிமன்ர உத்தரவுகள் மீறப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் தீபம்:  கோயில் நிர்வாகம் அநியாய விளக்கம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறிக்கை திருப்பரங்குன்றம் மலையுச்சியில் உள்ள தீபத் தூணில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் கூட, கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. மாறாக, சென்ற ஆண்டைப் போலவே உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் இந்த ஆண்டும் கார்த்திகை தீப நாளில் (நவ. 24) தீபம் ஏற்றப்பட்டது. இதனால், கோயில் முன்பாக கூடிய இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் … Continue reading திருப்பரங்குன்றம் தீபம்:  கோயில் நிர்வாகம் அநியாய விளக்கம்