முந்தைய ஆண்டில் (1928) கல்கத்தாவில் நடந்த காங்கிரசுக்கு மோதிலால் தலைவர், அடுத்த ஆண்டின் (1929) தலைவர் அவர் திருமகனார் ஜவஹர்லால் நேரு. அதுவரை காங்கிரசுக்குத் தலைமை தாங்கியவருள் ஜவஹர்லால் தான் வயதில் மிகவும் இளையவர். லாகூர் காங்கிரசில் தந்தையிடமிருந்து தலைமைப் பொறுப்பை அவர் மகன் ஜவஹர் வாங்கிக் கொண்ட காட்சியை பொதுமக்கள் அதிகம் விரும்பி ரசித்தனர்.
Day: December 6, 2022
என்றும் இந்தியாவுக்கு வழிகாட்டி
கோவையைச் சார்ந்த தொழிலதிபரும், கல்வியாளரும், கோவை பாரதீய வித்யாபவன் தலைவருமான முனைவர் திரு. பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் சுவாமி விவேகானந்தர் குறித்து 2012-இல் எழுதிய கட்டுரை இங்கே...
பாஞ்சாலி சபதம் – 1.1.27
அஸ்தினாபுரம் செல்லும் வழியில் ஒரு சோலையின்கண் வில்விஜயன் பாஞ்சாலியுடன் தனித்திருக்கிறான். அப்போது வானில் தோன்றிய வண்ண ஜாலங்களை, இயற்கையின் வனப்புகளை வியந்து பேசுகிறான். வண்ணத் தீறல்களாய் வானம் காட்டும் அழகிய காட்சிகளை விவரிக்கும் விஜயன், பச்சை வட்டமாய் மின்னும் கதிரவனைக் காட்டுகிறான். அது ஒரு அழகிய அறிவியல் சொல்லாட்சி. இறுதியில் காயத்ரி மந்திரத்தின் தமிழ் வடிவை தனது கவிதையில் புகுத்துகிறார் மகாகவி பாரதி. 'செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்-அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக' என்று ஞாயிற்றைப் புகழ்கின்றனர் இருவரும். விதிவழிப்பயணம் தொடர்கிறது...