-மகாகவி பாரதி
யாரை எங்கு வைக்க வேண்டும், எந்த நேரத்தில் எது நடக்க வேண்டும் என்பதெல்லாம் நமது முடிவல்ல; பராசக்தியின் லீலை. அதனைக் குறிப்பிட்டு, இரண்டாம் பாகம் எழுத ஆசி வேண்டுகிறார் மகாகவி பாரதி...

இரண்டாம் பாகம்
2.1. அடிமைச் சருக்கம்
2.1.1. பராசக்தி வணக்கம்
ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்
றமைத்தனன் சிற்பி, மற்றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினான், உலகினோர் தாய்நீ!
யாங்கணே, எவரை, எங்ஙனஞ் சமைத்தற்
கெண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை
இருங்கலைப் புலவனாக் குதியே. 1
$$$