பார்த்தனை இழந்த பிறகும் தருமன் தன்னிலை மீளவில்லை. இதுவே சூதின் இயல்பு. அதை மேலும் விசிறி விடுகிறான் சகுனி. வீமனை பந்தயம் வை என்கிறான். சூதே ஆயினும், எதிர்த்தரப்பில் இருப்பவர் பணயப் பொருளைக் கூறல் மரபல்ல. அதையும் மீறுகிறான் சகுனி. ஆனால், தருமன் ‘தக்கது செய்தல் மறந்தனன்’. “பெரும்புகழ் வீமனை, - உங்கள் பொய்வளர் சூதினில் வைத்திட்டேன் - வென்று போ!’ என்று உரைத்தனன்... விதி அவன் நாவில் வந்து அமர்ந்திருக்கிறதே!
Month: December 2022
அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளையும் வர்ணித்து கவியரசர் எழுதிய இப்பாடல், ‘கந்தன் கருணை’ திரைப்படத்தில் வெண்கலக் குரலோனின் இனிய பாடலாக முகிழ்த்தது...
இன்றைய இந்தியாவை உருவாக்கியவர் விவேகானந்தர்
விடுதலைப் போராட்ட வீரர் ஸ்ரீ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சுவாமி விவேகானந்தரால் ஆகர்ஷிக்கப்பட்டவர். சுவாமிஜி பற்றிய நேதாஜியின் கட்டுரை இது…
பாஞ்சாலி சபதம் – 2.1.9
சகுனியின் எள்ளலைக் கேட்டு வெகுண்ட தருமன், தனது தம்பி பார்த்தனைப் பணயம் வைத்து இழக்கிறான். முன்னதாக, “‘எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம்; - ஐவர் எண்ணத்தில், ஆவியில் ஒன்றுகாண்” என்கிறான்.
மகாவித்துவான் சரித்திரம்- 2(10அ)
ஒருநாள் இவருக்கு லண்டனிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் 'மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, இந்தியா' என்று மட்டும் விலாஸத்தில் எழுதப்பட்டிருந்தது. அது யாதொரு தடையுமின்றி இவருக்குக் கிடைத்தது. அதற்குக் காரணம் இவருடைய பெரும்புகழென்பதை அறிந்து மாணவர்களும் அன்பர்களும் மகிழ்ந்தார்கள். சுப்பிரமணிய தேசிகரும் இதனை யறிந்து பாராட்டினார்.
சத்திய சோதனை- 5 (41-44)
லோகமான்யர் இல்லாததன் நஷ்டத்தைக் குறித்து விசேஷ மகாநாட்டில் நான் மிகுந்த மன வருத்தத்துடன் உணர்ந்தேன். லோகமான்யர் அன்று உயிரோடிருந்திருப்பாராயின், அச்சமயம் அவர் நிச்சயம் எனக்கு ஆசி கூறியிருப்பார் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இன்றும் இருக்கிறது. ... எங்களிடையே எப்பொழுதும் அபிப்பிராய பேதம் இருந்திருக்கிறது. ஆனால், அது மனக்கசப்பை உண்டாக்கியதே இல்லை. எங்களுக்குள் இருந்த பந்தம் மிகவும் நெருக்கமானது என்று நம்பிக் கொள்ளுவதற்கு அவர் எப்பொழுதும் என்னை அனுமதித்து வந்தார்.
பாஞ்சாலி சபதம் – 2.1.8
சகாதேவனை அடுத்து அசுவ சாஸ்திர வல்லுநனான நகுலனையும் சூதில் பணயம் வைத்து இழக்கிறான் தருமன். அப்போது தனது பாதை தவறு என்று சிறு ஞானோதயம் தருமனுக்கு ஏற்படுகிறது. அதை உணர்ந்த சகுனி, “சிற்றன்னை மாத்ரிக்குப் பிறந்தவர்கள் என்பதால் சகாதேவனையும், நகுலனையும் வைத்து இழந்தாய் போலும். குந்தியின் பிள்ளைகளான உன் உடன் பிறந்தவர்களான பீமனையும் அர்ச்சுணனையும் சூதில் வைக்கத் தயங்கினை போலும்” என்று எள்ளி நகையாடுகிறான்.
மதத்திலே மறுமலர்ச்சி கண்ட மகான்
தமிழக முன்னாள் முதல்வர் அமரர் திரு. மு.கருணாநிதி (1924- 2018), சுவாமி விவேகானந்தர் மீது கொண்டிருந்த அளப்பரிய மரியாதை இக்கட்டுரையில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில் தான் குமரிமுனையில் விவேகானந்தர் பாறையில் அவருக்கு உயரிய நினைவு மண்டபம் விவேகானந்த கேந்திரத்தால் அமைக்கப்பட்டது. அப்பொழுது அவர் எழுதிய கட்டுரையே இந்தக் கட்டுரையாகும்.
பாரதியும் பாரதிதாசனும்
தமிழ் காத்த நல்லோரில் அண்மைக்காலம் வரை வாழ்ந்த பெரியார், அமரர் திரு. அ.ச.ஞானசம்பந்தன் (1916- 2002). தமிழ் இலக்கியச் சுவையை உணர்த்தும் திறனாய்வுத் துறைக்கு முன்னோடியானவர். அன்னாரது நூலான ‘பாரதியும் பாரதிதாசனும்’ இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது...
ஸ்வதந்திர கர்ஜனை- 2(17)
1940. முந்தைய ஆண்டில் துவங்கிய யுத்தம் ஐரோப்பாவில் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. இனி இந்த யுத்தத்தால் நடக்கப் போகும் அழிவுகளுக்கு ஹிட்லரே காரணம் என்று காந்திஜி கூறினார். என்னதான் பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களிடம் கருணையின்றி நடந்து கொண்டாலும் இந்த யுத்தத்தில் தனது அனுதாபம் முழுவதும் இங்கிலாந்திடமும் அதனோடு இணைந்து போரிடும் நேச நாடுகளின் பக்கம்தான் என்றார் காந்திஜி.
தேசத்தைக் காத்த தெய்வத் துறவி
பெங்களுரு, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையை 12.01.2009 அன்று திறந்துவைத்து, பாஜக மூத்த தலைவர் திரு. எல்.கே.அத்வானி ஆற்றிய உரையின் சுருக்கம் இது...
பாஞ்சாலி சபதம் – 2.1.7
துரியனின் ஆசை வார்த்தையை ஏற்று, தம்பியரில் இளையவனான சகாதேவனைப் பணயம் வைத்து ஆடிய தருமன் மீண்டும் தோற்கிறான். “தீய சகுனி கெலித்திட்டான்”.
பாணபத்திரரும் சியாமா சாஸ்திரியும்
திருவிளையாடல் புராணத்தில் ஏமநாதன் என்ற வடநாட்டு பாடகன் மதுரை வந்து, 'எனக்கிணையாக பாடக் கூடியவர் பாண்டிய நாட்டில் உண்டா? ' என சவால் விட்ட கதை உண்டு. அதே போன்றதொரு சம்பவம் சியாமா சாஸ்திரிகள் வரலாற்றிலும் உண்டு.
மார்கழிப் பனித்துளி (1-3)
‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் ‘மார்கழிப் பனித்துளி’ கவிதைகளை அவ்வப்போது எழுதி வருகிறார். அற்புதமான சந்தம், இனிய தாள லயத்துடன், அரும் பொருளுடன் அமைந்த இசைக்கவிதைகள் இவை. அவரது அனுமதியுடன் இக்கவிதைகள் இங்கே இடம் பெறுகின்றன...
சுவாமிஜி நமது தேசியத்தின் தன்மானம்
முன்னாள் ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி, ஆங்கில வார இதழான ‘THE WEEK’ பத்திரிகையில் 2014-இல் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது....