மலர்ந்தும் மலராத பாதி மலர் போல…

அண்ணன் - தங்கைக்கு இடையிலான பாசப் பிணைப்பை தனது அமரத்துவமான கவிதை வரிகளால் காவியம் ஆக்கியவர் கவியரசு கண்ணதாசன். திரைப்பாடலிலும் கூட, உயர்தரமான இலக்கியச் சுவையை வழங்க முடியும் என்று காட்டிய இப்பாடல், தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கும் தற்போதைய தமிழ்த் திரையுலகிற்கு ஒரு நினைவூட்டும் அமுதப் பேரொளி.

இன்றைய இந்தியாவின் முகங்கள்- 2

2013இல் நிதி நிறுவனங்களுக்கென (மியூச்சுவல் ஃபண்ட்) தனியாக ஒரு தளத்தை மும்பை பங்குச்சந்தையில் ஆஷிஷ் சௌஹான் அறிமுகம் செய்தார். அது மட்டுமன்றி சர்வதேச அளவிலான பங்குச்சந்தையை முதன்முதலில் இந்தியாவில் துவங்கினார். இந்தியா இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச், 2017 ஜனவரி மாதத்தில் குஜராத் மாநிலத் தலைநகரான காந்தி நகரில் துவங்கப்பட்டது. அதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.... இப்பொழுது என்எஸ்சி-யின் தலைவராக உள்ள விக்ரம் லிமாயின் பதவி ஓரிரு மாதங்களில் முடிவுறுகிறது.அடுத்த போட்டியாளர்களில் முன்னணியில் இருப்பவர், சர்வதேச அளவில் இந்தியாவின் முகமாக இருக்கும் ஆஷிஷ் சௌஹான்....

மகாமசானம்

வாழ்வின் நிலையாமையை 70 ஆண்டுகளுக்கு முந்தைய நடையில் எழுதி இருக்கிறார் சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தன். வாழ்வை முடிக்கப்போகும் கிழட்டுப் பிச்சைக்காரனும், வாழ்வு என்றால் என்னவென்றே அறியாத சிறு குழந்தையும் இயல்பாக சந்திக்கிறார்கள். இருவருக்கும் அந்தச் சந்திப்பு புரிவதாகத் தெரியவில்லை. அதைப் படிக்கும் நமக்குத் தான் நிலையாமை புரிகிறது. அற்புதமான உருவகக் கதை இது...

தமிழ்த் தாத்தா (41-45)

ஆசிரியப் பெருமான் தேடித் தொகுத்திருந்த சுவடிகளில்  ‘பெருங்கதை’ என்ற ஒன்று இருந்தது. கொங்குவேள் மாக்கதை என்றும் அது வழங்கும். அது முதலும் முடிவும் இல்லாமல் இருந்தது. பல இடங்களுக்குச் சென்று தேடியும் முழு நூலும் கிடைக்கவில்லை. கிடைத்ததை ஒருவாறு செப்பம் செய்து பதிப்பிக்க வேண்டுமென்று ஆசிரியர் எண்ணினார். ...வடமொழியில்  ‘பிரகத்சம்கிதா’ என்றிருந்த நூலை வடமொழி வல்லுநர்களைக் கொண்டு ஆராயச் சொல்லி, கருத்துக்களை அறிந்து கொண்டு, அவற்றிலிருந்த செய்திகளைத் தொடர்புபடுத்திக்கொண்டு, முழுவதுமாக இல்லாமல் இருந்த அந்த நூலை அச்சுக்குக் கொடுத்தார். அந்தப் பெருங்கதைப் பதிப்பு 1924-ஆம் ஆண்டு வெளியாயிற்று. அதன் பதிப்பு வேலை ஐந்து ஆண்டுகள் நடந்தது. இவ்வளவு நீண்ட காலம் எந்தப் புத்தகத்திற்கும் ஆசிரியர் செலவழித்தது இல்லை.... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 41- 45 அத்தியாயங்கள்...)

குயில் பாட்டு- 3

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் மூன்றாவது கவிதை இது...

இந்தியா (25.05.1907) சித்திர விளக்கம்

வ.உ.சி.யின் சுதேசி நாவாய் கம்பெனி துவங்கியபோது பாரதி பெருமிதத்துடன் சித்திரம் வரைந்து மகிழ்ந்தார். இந்தியா பத்திரிகையில் 28.5.1907இல் வெளியான சித்திர விளக்கம் இங்கே...

இந்தியா (15.06.1907) சித்திர விளக்கம்

இந்தியா- 150.06.1907 இதழில் வெளியான சித்திர விளக்கம் இது...

தமிழ்த் தாத்தா (36-40)

ஆசிரியப் பெருமானுக்கு எட்டுத்தொகையில் ஒன்றாகிய அகநானூற்றைப் பதிப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அதை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது வேறு சிலர் அதைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அதைப் பதிப்பிக்க முயன்றார். ஆனால் கடைசியில் ரா.இராகவையங்காருடைய உதவியினால் வேறு ஒருவர் அதைப் பதிப்பித்துவிட்டார். மற்றவர் பதிப்பித்த நூலைப் பதிப்பிப்பது ஆசிரியர் வழக்கமன்று. ஆதலால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார்.... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 35-40 அத்தியாயங்கள்...)

குயில் பாட்டு – 2

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் இரண்டாவது பாடல் இது... காதல், காதல், காதல், காதல் போயிற் காதல் போயிற் சாதல், சாதல், சாதல்....

ஒரு நாள் கழிந்தது

தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளுள் ஒருவரான புதுமைப்பித்தன் 85 ஆண்டுகளுக்கு முன் ‘மணிக்கொடி’ இதழில் எழுதிய சிறுகதை இது... இதில் குறிப்பிடப்படும் முருகதாசர் புதுமைப்பித்தனே தானோ என்ற எண்ணம் படிக்கும் யாருக்கும் வரவே செய்யும். அவ்வளவும் சுய எள்ளல். தமிழில் எழுத்தாளனாக இருந்தால் சுய எள்ளலுடன் தான் வாழப் பழக வேண்டும் போல. படிக்கும்போது நகைச்சுவையாகத் தெரிந்தாலும், நமது இதழ்கள் முறுவலித்தாலும், படித்து முடிக்கும்போது நெஞ்சின்மீது ஒரு பெரிய பாரம் ஏறி விடுகிறது. இதுவே இந்தச் சிறுகதையின் வெற்றி...

தமிழ்த் தாத்தா (31- 35)

1906-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியப் பெருமான் மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றதைப் பாராட்டி ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்குப் பாரதியார் வந்திருந்தார். அக்காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். இந்த விழாவுக்கு வந்திருந்த அவர் மூன்று பாடல்களை எழுதி வாசித்தார். அங்கேயே ஒரு தாளில் அந்த மூன்று பாடல்களையும் ஒரு பென்சிலினால் எழுதினார்; அந்தத் தாளை நான் பார்த்திருக்கிறேன், அந்தப் பாடல்கள் வருமாறு: (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 31- 35 அத்தியாயங்கள்)...

குயில் பாட்டு – 1

பாரதியின் பாடல்களிலேயே மிக நீண்ட பாட்டு, குயில்பாட்டேயாகும். கீட்ஸ் பாடிய நைட்டிங்கேல் பறவைப் பாட்டு இப்பாட்டை இசைக்கத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம். ஆனால் கற்பனை வீச்சில் குயில்பாட்டு எல்லா எல்லைகளையும் தாண்டிச் செல்கிறது....இப்பாட்டு வேதாந்த உள்ளுறை உடையது என்று கருதினர் சிலர்; வேறு சிலர் இதில் சித்தாந்த உள்ளுறை அமைந்திருப்பதாகக் கூறினர். எவ்வாறாயினும், குயில், மாடு, குரங்கு என்பவற்றைக் குறியீடுகளாகக் கருதும் நிலையில் இப்பாட்டு ஒரு தத்துவ உள்ளுறை உடையதே என்பது புலப்படும்.... மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் முதல் பாடல் இது...

கண்ணன் பாட்டு – 23

கண்ணனை கண்ணம்மாவாக வரித்து, அவளையும் தனது குலதெய்வமாகத் துதிக்கும் பாரதியின் இனிய பாடல் இது. கண்ணன் பாட்டில் கடைசிப் பாடல் இது...

தமிழ்த் தாத்தா (26-30)

"காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகியவற்றில் பெண்களின் வருணனைகள் இருப்பது உண்மைதான். அவற்றை மட்டும் படிப்பதோடு நிறுத்திவிடக் கூடாது. பாட்டு முழுவதையும் படித்தால், அவ்வாறு ஈடுபடுவது தவறு என்று சொல்லியிருப்பதைக் காணலாம். ஒன்பது சுவைகளில் சிருங்காரம் என்பது ஒன்று. வடமொழி நூல்களிலும் அந்தச் சுவை உண்டு. பெண்களின் வருணனை கூடாது என்றால் எத்தகைய இலக்கியங்களும் இருக்க முடியாது. நான் மிகப் பழைய இலக்கியங்களாகிய சங்க நூல்களை முதல் முதலாக வெளியிட்டிருக்கிறேன். அதனால் தான் தமிழ்நாடு என்னிடத்தில் கொஞ்சம் மதிப்பு வைத்திருக்கிறது. அவற்றில் கூடப் பெண்களின் வருணனை வருகிறது. அவற்றைப் படிக்கும் போது இலக்கியச் சுவையே தெரிகிறது. நீங்கள் அவற்றை எல்லாம் பொசுக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். வடமொழியில் உள்ள நூல்களும் அப்படித் தான். இவ்வாறு பார்த்தால் தமிழிலும், வடமொழியிலும் படிப்பதற்கு வேறு ஒன்றும் கிடைக்காது" என்றார்.....

இந்துத்துவ அம்பேத்கர்- நூல் அறிமுகம்

இன்று அம்பேத்கரை உரிமை கொண்டாடாதவர்கள் இல்லை. அம்பேத்கரை அவரது வாழ்நாளில் எதிர்த்த காங்கிரஸாரும், கம்யூனிஸ்டுகளும் இன்று அவரது பெயரை உச்சரிப்பதுதான் அம்பேத்கரின் வெற்றி. அதேசமயம், இந்து மதத்தை கடுமையாக நிராகரித்த அம்பேத்கரை இந்துத்துவர்கள் மிகவும் போற்றுவது எப்படி? அம்பேத்கரியலில் தீவிர ஆராய்ச்சியாளரான ம.வெங்கடேசனின் இந்நூல் இக்கேள்விக்கு விளக்கமளிக்கிறது.... 22 அத்தியாயங்களில் அம்பேத்கரின் கருத்துகளைக் கொண்டே கட்டி எழுப்பப்பட்ட ஆராய்ச்சி நூலாக இந்நூல் விளங்குகிறது. எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டனின் அறிமுக உரையும் சிறப்பாக உள்ளது. நூலாசிரியரின் கடின உழைப்பு வியக்க வைக்கிறது. இந்துத்துவர்களின் சிந்தனைப் போருக்கு ஒரு கருவியாக இந்நூல் வெளியாகி இருக்கிறது.