-மகாகவி பாரதி

இங்கிலாந்திலே கன்ஸர்வேடிவ் கட்சியார் ராஜ்ய நிர்வாகத்தை இழந்து லிபரல் கட்சியார் வரும் தருணத்தி லிருந்தபோது நமது நாட்டு ஜனத் தலைவர்களிலே பலர் இனி நமக்கு ஷேமகாலம் பிறந்துவிடுமென்று நம்பியிருந்தார்கள்.
இப்போது லிபரல் கட்சியார் ராஜ்ய அதிகாரத்துத்துக்கு வந்து முன்னிருந்தவர்களை நல்லவர்களாக்கி விட்டார்கள். கன்ஸர்வேடிவ் கட்சியார் அதிகாரத்திலிருந்தபோது பொதுச்சபைகளைத் தடுத்தல் முதலிய அநீதிகள் கிடையாது. இதையே சித்திரத்தில் விளக்கி யிருக்கிறோம்.
கன்ஸர்வேடிவெ பாட்டி ‘இந்தியா’ என்ற குழந்தைக்குப் பச்சைப்பால் கொடுக்க வருவதைத் தள்ளிவிட்டு, லிபரல் பாட்டி பழுக்கக் காய்ச்சிய பால் கொடுக்க வருகிறாள்.
இந்தியா (15.06.1907), பக்: 2
$$$