-கவியரசு கண்ணதாசன்
மறைந்த (அதாவது மறைந்து போனதாகக் கருதிய) மனைவிக்கு நினைவில்லம் கட்டுகிறான் கணவன். அவனது நினைவில் வந்து பாடுகிறாள் அவனது மனைவி. இதுதான் இதயகமலம் படத்தின் காட்சி அமைப்பு. அதற்கு ஏற்ற உருக்கமான மெல்லிசை திரு. கே.வி.மகாதேவன். கிடைத்த வாய்ப்பில் ஓர் அற்புத வாழ்வியல் கவிதையைப் படைத்திருக்கிறார் கவியரசர். எவ்வளவு அழகிய சொற்கள்? எத்துணை தூய காதல் இந்த வரிகளில்?.

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல,
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல,
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…
நீ இல்லாமல் நானும் நானல்ல,
நீ இல்லாமல் நானும் நானல்ல! (2)
.
இங்கு நீயொரு பாதி, நானொரு பாதி!
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி! ( 2)
காலங்கள் மாறும்… காட்சிகள் மாறும்…
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல!
.
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல,
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல,
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…
நீ இல்லாமல் நானும் நானல்ல,
நீ இல்லாமல் நானும் நானல்ல!
.
ஒரு தெய்வமில்லாமல் கோவிலுமில்லை!
ஒரு கோவிலில்லாமல் தீபமுமில்லை! (2)
நீ எந்தன் கோவில்… நான் அங்கு தீபம்…
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல!
.
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல,
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல,
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…
நீ இல்லாமல் நானும் நானல்ல,
நீ இல்லாமல் நானும் நானல்ல!
.
என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே,
நான் வாரியணைத்தேன் ஆசையினாலே! ( 2)
நீ தருவாயோ… நான் தருவேனோ…
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல!
.
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல,
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல,
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…
நீ இல்லாமல் நானும் நானல்ல,
நீ இல்லாமல் நானும் நானல்ல!
.
திரைப்படம்: இதயகமலம் (1965) இசை: கே.வி.மகாதேவன் பாடகி: பி.சுசீலா
$$$