ஸ்வதந்திர கர்ஜனை- 1(7)

தன்னிடம் பெரும் படையெதுவும் இல்லை, ஆயுதங்களும் சொல்லும்படியாக எதுவும் இல்லை, இருந்தும் அவரிடமிருந்த சாமர்த்தியமும் வீரமும் கைகொடுக்க, பிரிட்டிஷாருக்கு தாந்தியா தோபே சிம்ம சொப்பனமாக இருந்தார். தாந்தியா என்ன மந்திரம் செய்தாரோ தெரியாது, எதிரிகளான சுதேச மன்னர்கள்கூட இவரைக் கண்டதும் கேட்ட உதவிகளைச் செய்து கொடுத்தார்கள்.

ஆச்சார்ய புருஷர் விவேகானந்தர்

விடுதலை வீரர், 'வீரமுரசு’ என்றழைக்கப்பட்ட தேசபக்தர் சுப்பிரமணிய சிவா,  ‘ஸ்வதந்திராநந்தன்’ என்ற புனைப்பெயரில் சுவாமி விவேகானந்தரின் அருள்மொழிகளை மொழிபெயர்த்து வெளியிட்ட நூலின் முன்னுரை இது. இச்சிறிய கட்டுரையில், தான் அறிந்த சுவாமி விவேகானந்தரை எளிய முறையில் அறிமுகம் செய்கிறார் சுப்பிரமணிய சிவா.

கலியுக கடோற்கசன்

சமகால நிகழ்வுகளை நமது முன்னை வரலாற்றுப் பெருமையுடனும், கனவுகள் மிக்க எதிர்காலத்துடனும் ஒப்பிட்டு, சமுதாயத்துக்கு வழிகாட்டுபவரே உண்மையான எழுத்தாளர். அந்த வகையில், மகாகவி பாரதி தமிழ் எழுத்தாளர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்கிறார். இந்தக் கதையில் அதீத பலசாலி ஒருவனது திறன்களை பகடியாக வர்ணிக்கும் பாரதி, அவன் வைத்திருந்த சில காகிதங்களில் இருந்த குறிப்புகளை மிகவும் கேலியாக குறிப்பிடுகிறார். ‘ஹோம்ரூல்’ இயக்கத்தையும் இடையே போகிற போக்கில் நையாண்டி செய்கிறார். இறுதியாக “ஹிந்துக்களுடைய மூல பலமாகிய மந்திர சாஸ்திரத்தை இடைக்காலத்து மூடர் இவ்வளவு சீர்கெடுத்து வைத்திருப்பதையும், அதைத் தற்காலத்து மூடர்களிலே பலர் நம்புவதையும் நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமுண்டாயிற்று” என்று அவர் குறிப்பிடுவதிலிருந்து, தேசநலன் கருதும் உன்னத எழுத்தாலனை அவரிடம் தரிசிக்கிறோம்.