எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…

ஆறாம் வகுப்பு படித்தபோது மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ துணைப்பாட நூலாக இருந்தது. அதை இரண்டே நாளில் படித்து முடித்துவிட்டேன். தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மோகன்தாஸின் கதையைப் படித்தபோது என்னை அறியாமல் கண்ணீர் உகுத்தேன். காந்தி என்பவர் சாதாரணமானவர் அல்ல என்று மனதில் பதிந்தது. ஆனால், தனது பலவீனங்களையும் அவர் சொல்லிச் செல்வது அந்த வயதில் எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.

ஒரு தீர்க்கதரிசியின் பார்வையில் இந்திய வரலாறு

-பேரா.  சி.ஐ.ஐசக் முன்னுரை: பாரத வர்ஷத்தின் இந்த ஆண்டு ஒரு குறிப்பிடப்பட வேண்டிய ஆண்டாகும்.  ஒரு தீர்க்கதரிசியின் 150வது ஜயந்தியைக் கொண்டாடும் ஆண்டு.  ஒரு துறவி என்பதற்காக சுவாமி விவேகானந்தர் தன் எல்லைகளை ஆன்மிக வட்டத்திற்குள் மட்டும் குறுக்கிக் கொண்டு விடாமல் பருப்பொருள் உலகிலும் தனது உறுதியான கால்தடங்களைப் பதித்தவர்.  பட்டறிவிலும், அறிவு நெறியிலும் மேலோங்கிய இந்திய மண்ணில் ஆன்மிகத்திலும், பருப்பொருளிலும் ஒருங்கே தன் முத்திரையைப் பதித்தவர் சுவாமி விவேகானந்தர்.  இந்திய இளைஞர்களின் திறமையில் அவர் தனது உறுதியான நம்பிக்கையைக் … Continue reading ஒரு தீர்க்கதரிசியின் பார்வையில் இந்திய வரலாறு

சத்திய சோதனை- 4(26-30)

அடுத்த ரெயிலில் கஸ்தூரிபாயை அழைத்துச் செல்ல ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போக ஒரு ரிக்ஷாவை அமர்த்தினேன். அபாய நிலையிலிருந்த அவளை அதில் வைத்துக் கொண்டு புறப்பட்டேன்.கஸ்தூரிபாயை உற்சாகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக அவள் எனக்கு ஆறுதல் கூறினாள். “எனக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது. நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்றாள்.பல நாட்களாக ஆகாரமே இல்லாததனால் அவள் எலும்பும் தோலுமாக இருந்தாள். ஸ்டேஷன் பிளாட்பாரம் மிகப் பெரியது. ரிக்ஷாவைப் பிளாட்பாரத்திற்குள் கொண்டு போக முடியாததனால், அவளை என் கைகளிலேயே தூக்கிக் கொண்டுபோய் ரெயில் வண்டியில் ஏற்றினேன்....

பிழைத்தோம்

கதையில் தத்துவம் சொல்லலாம். புரியாத சித்தாந்தத்தையும் கூட எளிதாக விளக்கலாம். இதோ மகாகவியின் ஒரு கதை...

எனது முற்றத்தில் – 23

ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய இரண்டையும் ஹிந்தியில் மொழிபெயர்த்த திருச்சி பிளஸ் டூ மாணவி அப்சராவை சில வாரங்களுக்கு முன் ஆளுநர் அடையாளம் கண்டு, குடும்பத்துடன் ராஜ்பவன் வரவழைத்துப் பாராட்டியிருக்கிறார்.  தமிழில் உள்ள ஞானம் ஹிந்தி வாயிலாக நாடெங்கும் பரவ அந்த மொழிபெயர்ப்பு கருவி ஆயிற்று என்பதுதான் ஆளுநருக்கு உவப்பு அளித்திருக்கிறது....