தெய்வ நம்பிக்கை உள்ள ஹிந்து ஒன்றும் பொதுவாக பணத்துக்குப் பறப்பவன் அல்ல. அவனுடைய கலாச்சாரம் அவனுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது, ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்று. செல்வத்திற்குப் பெயரே ஐஸ்வர்யம் (ஈஸ்வர சம்பந்தம் உள்ளது). பேரறிஞர் தீனதயாள் உபாத்யாய குறிப்பிடுவாரே, “சத ஹஸ்தம் ஸமாஹர, சஹஸ்ர ஹஸ்தம் வீக்கிற” என்ற உபநிடத வாக்கியத்தை, அதன் பொருள்தான் என்ன? நூறு கரங்களால் விளைவி, ஆயிரம் கரங்களுக்கு வழங்கு என்பதுதானே?
Day: October 30, 2022
வேதபுரத்தின் இரகஸ்யம்
மகாகவி பாரதி எழுதிய ‘கிரைம் கதை’ இது. இக் கதை ‘கதா ரத்னாகரம்’ மாதப் பத்திரிகையில் 1920 ஆகஸ்ட், செப்டம்பர் இதழ்களில் பிரசுரமானது. பின்னர், நூலாக்கம் பெற்ற ‘கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ தொகுதியில் இடம்பெற்றது. பாரதி எழுதிய கதைகளில் இது ஒரு வித்தியாசமான கதை. சூழ்நிலை ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றி விடுகின்றது என்பதே கதையின் முக்கியக் கருத்தாக அமைந்துள்ளது. குற்றத்தைப் புலனாய்வு செய்ய வந்த காவல் அதிகாரி கடைசியில் அந்த விவகாரத்தையே மறந்துவிட்டார் என்று முடிக்கும் பாரதியின் குறுப்பு ரசிக்கத் தக்கது....
கொன்றைவேந்தன் (66-70)
‘போனகம்’ என்பதற்கு உணவு, உணவு வகை எனப் பொருள். உழவு என்பது வேளாண் தொழிலை முக்கியமாகக் குறித்தாலும், வேறு எல்லா வகை கடின உழைப்புப் பணிகளையும் குறிக்கும். உழை என்பதற்கு வருந்தி முயற்சி மேற்கொள்ளல், கடினமாகப் பணியாற்றல் என்று பொருள். மற்ற எல்லாத் தொழில்களையும் விட விவசாயத்துக்கே அதிக உடல் உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால் ‘உழை’ என்பதை வேர்ச் சொல்லாகக் கொண்ட உழவு என்ற சிறப்புச் சொல், விவசாயத்துக்கு அமையப் பெற்றது.
சத்திய சோதனை – 5 (1-5)
-மகாத்மா காந்தி ஐந்தாம் பாகம் 1. முதல் அனுபவம் நான் தாய்நாட்டிற்கு வந்து சேருவதற்கு முன்னாலேயே போனிக்ஸிலிருந்து புறப்பட்டவர்கள் இந்தியா சேர்ந்து விட்டனர். நாங்கள் முதலில் போட்டிருந்த திட்டத்தின்படி நான் முன்னால் வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், யுத்தம் காரணமாக இங்கிலாந்தில் எனக்கு ஏற்பட்ட வேலைகளினால் எங்கள் திட்டங்களெல்லாம் மாறிவிட்டன. இந்தியாவுக்கு எப்பொழுது போவேன் என்ற நிச்சயம் இல்லாமல் நான் இங்கிலாந்தில் இருக்க வேண்டி வந்தபோது, போனிக்ஸிலிருந்து வந்தவர்களுக்கு இந்தியாவில் இடம் தேட வேண்டிய பிரச்னை எனக்கு … Continue reading சத்திய சோதனை – 5 (1-5)
தன்னை உணர்ந்தது பாரதம்; உணர வைத்தார் விவேகானந்தர்!
அமரர் திரு. இராம கோபாலன் (19.09.1927 – 30.09.2020), ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரசாரகர்களுள் ஒருவர். தமிழகத்தில் ஹிந்து சமுதாயத்திற்காக குரல் கொடுக்கவும், மக்களை ஒன்றிணைக்கவும், ஹிந்து முன்னணி அமைப்பை 1981- இல் நிறுவி, தனது 94-வது வயதிலும் இளைஞரைப் போல தொடர்ந்து இயங்கியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கட்டுரை இங்கே...