கொன்றைவேந்தன் (1-5)

தமிழில் எழுந்த பிற்கால (சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்) நீதிநூல்கள், சமுதாயத்தின் தகவமைப்பில் பேரிடம் வகித்துள்ளன. கடந்த நூற்றாண்டின் இறுதி வரை தமிழ்ப் பாடத்தில் இவை கற்பிக்கப்பட்டன. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அடிப்படைப் பாடமாக இருந்தவை இந்த நூல்களே. எளிய ஒற்றை வரிகளில் வாழ்க்கைக்கு அடிப்படையான நீதிபோதனையைச் சொல்லிச் செல்வது இந்த நூல்களின் குணம். பிற்காலப் பெண்பாற் புலவரான (சங்க கால ஔவை வேறு) ஔவையார் இயற்றிய ‘கொன்றைவேந்தன்’ அவற்றில் குறிப்பிடத் தக்கது. இந்நூலுக்கு மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் எழுதிய விளக்கவுரை நமது தளத்தில் வெளியாகிறது...

மகாவித்துவான் சரித்திரம்- பாகம் 2 (முகவுரை)

தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதையரை உருவாக்கியவர், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள். அவரது வீட்டில் குருகுலவாசம் இருந்து தமிழ் கற்ற உ.வே.சா. பிற்காலத்தில், தமிழுக்கு அணியாகத் திகழும் பல இலக்கியங்களை கால வெள்ளத்தில் மறையாமல் பதிப்பித்துக் காத்தார். உ.வே.சா. தனது குருநாதரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் தகுந்த ஆதாரங்களுடனும் எழுதிய நூல் இது. “திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்” என்பதே ஐயர் அளித்த தலைப்பு. இங்கு நமது வசதிக்காக, ‘மகாவித்துவான் சரித்திரம்’ என்று குறிக்கப்படுகிறது. இந்நூலில் தனது குரு மீதான பக்தியை சீடர் வண்ணமுற வெளிப்படுத்துகிறார். வாழையடிவாழையென வந்துதித்த மரபால் நமது தாய்த் தமிழ் மொழி காக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு மிகச் சரியான சான்றான இந்நூல், நமது தளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. முதல் பாகம் முடிந்து, இரண்டாம் பாகம் இன்று தொடங்குகிறது...

எனது  முற்றத்தில்- 25

இதை வாசிக்கும்போதே,  'கோயில் வாசல் பிரசாத விநியோக விஷயத்தில் மட்டுமல்ல,  பொதுவாகவே  ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின்  ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுக்கோப்பு நிலவினால் எப்படி இருக்கும்!' என்று உங்கள் மனதில் கற்பனை அரும்பாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.  ஒழுங்கும் கட்டுப்பாடும் எல்லோருக்கும் வேண்டியிருக்கிறது. யாராவது ஒருத்தர் வந்து அதில் பயிற்சி கொடுக்க வேண்டியிருப்பது இன்றைய நிலை. சமுதாயம் சதா சுயமாக ஒருங்கிணைந்து இயங்கும் பொற்காலம்  வராமலா போகப் போகிறது? 

சத்திய சோதனை- 4(36-41)

-மகாத்மா காந்தி நான்காம் பாகம் 36. பிராயச்சித்தமாகப் பட்டினி      பையன்களையும், பெண்களையும் சரியான வழியில் வளர்த்து அவர்களுக்குக் கல்வி போதிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பது நாளுக்கு நாள், மேலும் மேலும் எனக்குத் தெளிவாகிக் கொண்டு வந்தது. அவர்களுக்கு உண்மையான உபாத்தியாயராகவும் பாதுகாப்பாளராகவும் இருக்க வேண்டுமாயின், நான் அவர்களுடைய உள்ளங்களைத் தொட வேண்டும். அவர்களுடைய இன்ப துன்பங்களில் நான் பங்கு கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் நான் உதவி செய்ய வேண்டும். இளமையின் காரணமாக அவர்களுக்கு … Continue reading சத்திய சோதனை- 4(36-41)

புதுப் பேய்

வேதபுரம் (புதுவை) தொடர்பான இன்னொரு கதை இது. எலிக்குஞ்சு செட்டியாரின் மகள் காந்திமதிக்கு பிடித்த பேய் இன்னதென்று கண்டறிய முடிகிறதா? படியுங்கள், மகாகவி பாரதியின் நையாண்டி புலப்படும்!

உலகமயச் சூழலில் விவேகானந்தரின் தேவை

அமரர் திரு. பி.பரமேஸ்வரன் (1927 அக். 3 – 2020 பிப். 9), ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த தலைவர்; சிந்தனையாளர். திருவனந்தபுரத்தில் இயங்கும் பாரதீய விசார் கேந்திரத்தின் நிறுவனர். கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் மற்றும் விவேகானந்த கேந்திரத்தின் தலைவராக செயல்பட்டவர். 2012-இல் சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது ஆங்கிலத்தில் அவர் எழுதிய இக்கட்டுரையை திரு. சத்தியப்பிரியன் தமிழில் வழங்கியுள்ளார்....