கொன்றைவேந்தன் (41-45)

கைதவம் என்றால் வஞ்சனை, கபடம், சூது என்று பொருள். தெய்வம் கருணைக்கடல், மிகவும் பொறுமையானது. ஆயினும் உலகில் வஞ்சகக் கொடுமை மிகுந்துகொண்டே வந்தால், அந்த அசுரத்தனத்துக்கு முடிவுகட்ட தெய்வம் அறச்சீற்றத்தோடு பேரச்சம் தரும் உருவில் தோன்றும். அப்போது வஞ்சனை அழியும்.

மகாவித்துவான் சரித்திரம்- 2(3)

இவர் திருநீறு பெறுவதற்கு எழுந்து செல்லும்பொழுது தேசிகரைப் பார்ப்பதற்கு மிக்க ஆவலோடு இவர் பின்னே நின்ற யானும் சென்றேன். நெற்றியில் திருநீறு இட்டு இவரை இருக்கச்செய்துவிட்டுத் தேசிகர், "உங்களுக்குப் பின்னே வருகிற இவரோ முன்பு வந்த பொழுது பாடங்கேட்பதாகச் சொல்லிய சாமிநாதைய ரென்பவர்?" என்று விசாரித்தார். அப்பொழுது 'ஸ்வாமி' என்று இவர் சொல்லவே எனக்கு உண்டான உவப்பிற்கு எல்லையே இல்லை. ஒரு பொருளாக என்னை நினைந்து தாம் வந்தபொழுது நான் பாடங்கேட்டு வருவதாக இப்புலவர்பிரான் சொல்லிய அருமையையும் அதனை ஞாபகப்படுத்திக் கொண்டு விசாரித்த தேசிகருடைய பெருமையையும் எண்ணி எண்ணி இன்பம் அடைந்து கொண்டே சென்று தேசிகர் இருக்கும்படி சொல்ல இவருக்குப் பின்னே இருந்தேன்.

விதி

நாட்டு விதி என்பது அர்த்த, நீதி சாஸ்திரங்களின் விதி. இதனைத் தற்காலத்தோர் அரசியல் விதியென்று சொல்லுகிறார்கள். அதுவும் சாஸ்திர விதியோடு சேர்ந்ததுதான். ஆனால் மற்ற இலக்கணம் முதலிய சாஸ்திரங்களின் விதிகளைக் காட்டிலும் அரசியல் விதிகள் மிகவும் விரைவுடன் மாறுபடுவதால் இதனைத் தனியாக ஒரு பகுதியாக்கும்படி நேரிட்டது. எனவே, தெய்வ விதிக்குப் பரிபூரணமாக உட்பட்டு சாஸ்திர விதிகளையும் நாட்டு விதிகளையும் மேன்மேலும் புத்திசாலித்தனமாகச் சீர்திருத்திக் கொண்டு வந்தால், மனுஷ்ய ஜாதிக்கு ஷேமமுண்டாகும்.