அவருடைய அடிச்சுவட்டில்…

ஸ்ரீ. தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் (1903- 1991), திருப்பூரைச் சார்ந்தவர்; விடுதலைப் போராட்ட வீரர்; காந்தியவாதி;  தமிழக கல்வி அமைச்சராக இருந்தவர்; கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம் அமையக் காரணமானவர்; பெண்கல்விக்காக இவர் துவங்கிய கல்லூரி, இன்று அவிநாசிலிங்கம்  மகளிர் பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது.  சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை கொங்கு மண்டலத்தில் பரப்பியதில் இவரது பங்கு அளப்பரியது. சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே...

உஜ்ஜியினி

நூறாண்டுகளுக்கு முன்னமே, பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த இதழாளர் மகாகவி பாரதி. ”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்...” என்று முரசுப் பாட்டில் முழங்கும் கவிஞர், பெண் விடுதலைக்காக பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி இருக்கிறார். ஆணும் பெண்ணும் நிகர் என்று அன்றே அறிவுறுத்திய மகாகவியின் கதை இது...