ஸ்வதந்திர கர்ஜனை- 1(3)

பேஷ்வா பாஜிராவ் காலமானார் எனும் செய்தி கிடைத்த அடுத்த கணம் பேஷ்வாவுக்குக் கொடுக்கப்பட்ட் வந்த மானியமான ரூபாய் எட்டு லட்சமும் நிறுத்தப்பட்டுவிட்டது. அவருடைய சொத்துக்களுக்கு நானா சாஹேப் உரிமை கொண்டாட முடியாது என்று அனைத்தையும் கம்பெனியார் எடுத்துக் கொண்டுவிட்டனர். தன்னுடைய உரிமையை நிலைநாட்ட நானா பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியாருக்கு விரிவான மனு ஒன்றை எழுதி அனுப்பினார். அதில் அவருக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் குறித்துப் பட்டியலிட்டார்....

தராசு கட்டுரைகள்- 11

பிராமணப் பிள்ளை சிரித்தான். சொல்லுகிறான்:- தராசே, விதியை நம்புவது பிழை. ஐரோப்பியர் விதியை நம்புவதில்லை. ஆசியாவிலுள்ள மகமதிய ஜாதியாரும் ஹிந்துக்களுந்தான் விதியை மும்மரமாக நம்புகிறார்கள். இதனால் இந்த ஜாதியாரெல்லாம் வீழ்ச்சியடைந்தார்கள். ஐரோப்பியர் நாகரீகத்திலும் செல்வத்திலும் ஓங்கி வருகிறார்கள். முயற்சி செய்பவன் நல்ல ஸ்திதிக்கு வருவான். விதியை நம்பினவன் சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடப்பான். இங்ஙனம் பிராமணப் பிள்ளை சொல்லியதைக் கேட்டுத் தராசு சிரித்தது.