கொன்றைவேந்தன் (46-50)

நாடு முழுவதும் வாழ என்று சொல்லும்போது நாட்டுமக்கள் அனைவருமே நலமுடன் வாழுதல் என்ற பொருளும் அடங்கியுள்ளது. இதைத்தான் இன்றைய மத்தியஅரசு ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்று கூறி செயல்படுத்த முனைப்புக் காட்டுகிறது. நாட்டு வளர்ச்சியின் பயன், கடையருக்கும் மடைமாற்றமின்றி போய்ச்சேர வேண்டும். அப்போதுதான் நாடு முழுவதும் வாழும்.

ஸ்வதந்திர கர்ஜனை- 2(2)

இனி சுதந்திரத்துக்காகப் போராடிய ‘இந்திய தேசிய காங்கிரஸ்’  பிறந்து வளர்ந்த வரலாற்றைப் பார்ப்போம். ‘காங்கிரஸ்’என்று இங்கு குறிப்பிடும் சொல்லுக்கும் இன்று இருக்கும் ஒரு அரசியல் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக நினைக்க வேண்டாம். இங்கு ‘காங்கிரஸ்’ என்னும் சொல், முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனுக் கொடுத்து சலுகை பெறும், படித்த இந்தியர்கள் தொடங்கிய ஒரு அமைப்பைக் குறிக்கும் சொல்....

ஜப்பான் தொழிற்கல்வி

தெளிந்த அறிவும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் சக்தியுண்டாகும். தெளிந்த அறிவென்பது இரண்டு வகைப்படும் – ஆத்ம ஞானம், லெளகிக ஞானம் என. ஆத்ம ஞானத்தில் நமது ஜாதி சிறந்தது. லெளகிக ஞானத்தில் நம்மைக்காட்டிலும் வேறு பல தேசத்தார் மேன்மை யடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தேசங்களில் ஜப்பான் ஒன்று. புத்தகங்களாலும், பத்திரிகைகளாலும், யாத்திரைகளாலும் நாம் ஜப்பான் விஷயங்களை நன்றாகத் தெரிந்து கொள்ளுதல் பயன்படும். கூடியவரை பிள்ளைகளை ஜப்பானுக்கு அனுப்பிப் பலவிதமான தொழில்களும் சாஸ்திரங்களும் கற்றுக் கொண்டு வரும்படி செய்வதே பிரதான உபாயமாகும். தொழிற் கல்வியிலும் லெளகிக சாஸ்திரப் பயிற்சியிலும் நாம் மற்ற ஜாதியாருக்கு ஸமானமாக முயலுதல் அவசரத்திலும் அவசரம்.