கொன்றைவேந்தன் (56-60)

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். விதை ஒன்று போட சுளை வேறு விளையாது. இவையெல்லாம் முன்னோர்தம் அனுபவ உரைகள். தீமை செய்தவன் நன்கு வாழ்வதைப் போல காட்சி தருவான். ஆனால் திகைத்திட வீழ்ச்சி அடைவான். நல்லவன் துயருறுவதைப் போலத் தோன்றும். ஆனால் அவனது தர்மம் தலைகாக்கும், தலைமுறைகளையும் காக்கும். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்றார் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார்.

மகாவித்துவான் சரித்திரம் -2 (4அ)

செட்டியார் எழுந்து என்னைப் பார்த்து, "நீர் நன்றாகப் படிக்க வேண்டியவற்றைப் படித்துக் கொள்ளும். கூட இருப்பதையே பெரும்பயனாக நினைந்து சிலரைப்போல் வீணே காலங்கழித்துவிடக் கூடாது; சிலகாலம் இருந்துவிட்டுத் தெரிந்துவிட்டதாக பாவித்துக்கொண்டு சொல்லாமல் ஓடிப்போய்விடவும் கூடாது. இப்படிப் பாடம் சொல்லுபவர்கள் இக்காலத்தில் யாரும் இல்லை. உம்முடைய நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன்" என்று சொல்லி இவரிடம் விடைபெற்றுத் தம் வீடு சென்றார். செட்டியாருடைய வார்த்தைகள் எனக்கு அமிர்த வர்ஷம் போலேயிருந்தமையால் அவற்றைக் கருத்திற் பதித்து அங்ஙனமே நடந்து வருவேனாயினேன்.

எதிர் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை

வரதட்சிணைக் கொடுமைக்கு எதிரான மகாகவி பாரதியின் முழக்கம் இது. நூற்றாண்டுகளுக்கு (1915) முன்னர் பாரதி எழுதிய அவலம் இன்றும் நமது நாட்டில் தீரவில்லை. இந்த ‘ஊழலுக்கு’த் தீர்வாக மகாகவி முன்வைப்பது பெண் விடுதலையே. இரு பெண்களைப் பெற்றவரல்லவா? சரியாகத் தானிருக்கும்.