கொன்றைவேந்தன் (61-65)

பெற்றோர் என்றதும் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்- தந்தையர் நினைவுக்கு வருவர். பிள்ளைப் பேறு பெற்றவர் என்பதால் அவர்களுக்கு பெற்றோர் எனப் பெயர். ஆயினும் பேறுகளில் பெரிய பேறு, மெய்யான பேறு, மெய்ஞானத்தைப் பெறுவதுதான். ஆகையால் அத்தகைய உண்மையான உயர் ஞானத்தைப் பெற்றவர்களையே பெற்றோர் எனக் குறிப்பிடுகிறார் ஔவையார்.

ஸ்வதந்திர கர்ஜனை- 2(3)

இது சம்பந்தமாக ஹியூம் பல இந்தியத் தலைவர்களுடனும்,  அப்போதைய வைஸ்ராய் டப்ரின் பிரபுவிடமும் விவாதித்தார். இதில் ஆங்கிலேயர்களும் ஆர்வம் காட்ட முக்கிய காரணம் இருந்தது. படித்த இந்தியர்களையும் இந்திய அரசு நிர்வாகத்தில் ஈடுபடுத்தினால், அவர்கள் பிரச்னைகளைக் கண்டறிந்து சரிசெய்யவும், மக்களை சமாதானப் படுத்தவும் முடியும் என்று -  சிப்பாய்க் கலகம் கொடுத்த பாடம் காரணமாக - ஆங்கிலேயர்கள் நினைத்தனர். அப்படி உருவாகும் அமைப்பு சமூக, அரசியல் நோக்கமுடையதாக இருத்தல் அவசியம் என்பதையும் அவர்கள் உணர்ந்ததால் வைஸ்ராயும் இதில் ஆர்வம் காட்டினார்.

வேப்ப மரம்

இக் கதையை முதன்முதலாகக் கண்டறிந்து தமது ‘பாரதி தமிழ்’ நூலில் திரு. பெ.தூரன் அவர்கள் பதிப்பித்தார். வேப்ப மரம் பேசுமா? பேசினால் என்ன பேசும்? அற்புதமான கற்பனை... அகஸ்த்ய மஹரிஷியும், தாம்ரபர்ணி யம்மனும் ஜலக்கிரீடை செய்வதாக எழுதும் கற்பனைவளத்தை மீறும் வகையில், மகாகவி பாரதிக்கே உரித்தான வேதாந்தச் சாயல் இக்கதையில் உண்டு.