-மகாகவி பாரதி
வ.உ.சி.யின் சுதேசி நாவாய் கம்பெனி துவங்கியபோது பாரதி பெருமிதத்துடன் சித்திரம் வரைந்து மகிழ்ந்தார். இந்தியா பத்திரிகையில் 28.5.1907இல் வெளியான சித்திர விளக்கம் இங்கே…

சித்திரம்
தூத்துக்குடி ஸ்வதேசீய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியர் ஸ்டீமர்கள் கொண்டு வந்திருக்கும் மங்களகரமான செய்தியைக் கருதி நாம் “சுதேசீயக் கப்பல்கள்’’ என்ற சித்திரம் பதிப்பித்திருக்கின்றோம்.
தூத்துக்குடியாரின் அரிய முயற்சிக்கும் நம் நாட்டிலுள்ளோர் அனைவரும் பொருளாலும் வாக்காலும் வேறு வகையாலும் துணைபுரியக் கடமைப்பட்டிருக்கிறார்க ளென்பதை இங்கே வலியுறுத்துகின்றோம்.
இந்தியா (25.05.1907), பக்: 2
$$$