சமுதாயச் சிற்பி ராமானுஜர் -2

குருவை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கிய ஸ்ரீ ராமானுஜர்,  ஸ்ரீபெரும்புதூரில் பொ.யு. ஆண்டு 1017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி அதாவது கலி ஆண்டு 4118-இல் சக ஆண்டு 938-இல் பிங்கள ஆண்டு சித்திரை மாதம் 12-ஆம் நாள், சுக்லபட்ச பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருடைய தந்தை ஆசூரி கேசவாச்சாரியார் ஆவார். தாயார் காந்திமதி அம்மையாவார்.

மகாவித்துவான் சரித்திரம்- 2(5)

அப்பொழுது தேசிகர் புன்னகை கொண்டு, "என்ன பிள்ளையவர்கள்! இராத்திரி வெகு வேடிக்கைகள் பண்ணிவிட்டீர்களே; மிகவும் சிரமமாக இருந்திருக்குமென்றும் தூக்கம் கெட்டிருக்குமென்றும் எண்ணுகிறோம்" என்று பாராட்டிக் கூறி அழைத்து நெற்றியில் திருநீறிட்டுப் பக்கத்திலிருக்கும்படி செய்தார். பின்பு அங்கேயிருந்த பிரபுக்களையும் வித்துவான்களையும் நோக்கி, "இவர்கள் இருப்பது ஆதீனத்திற்கு மிகவும் கெளரவமாகவே இருக்கின்றது. என்ன பாக்கியமிருந்தாலும் இதற்கு ஈடாகாது. குறைந்த கல்வியுடையோரையும் கெளரவிக்க வேண்டுமென்று எண்ணியிருக்கிற இவர்கள் குணம் யாருக்கு வரும்! ஆதீனத்தின் அதிர்ஷ்டமென்றே சொல்ல வேண்டும்" என்று முதல்நாள் நிகழ்ந்தவற்றைச் சொல்லி எல்லோரையும் மகிழ்வித்தனர்.....

மனைவி அமைவதெல்லாம்…

பெண்பித்தனான கதாநாயகன் பாடுவதாக அமைந்த இப்பாடல், திரு. கே.பாலசந்தர் இயக்கத்தில் 1976-இல் வெளியான ‘மன்மத லீலை’ திரைப்படத்தில் இடம்பெற்றது. திரைக்கதையோட்டத்துக்கு ஏற்ப, கவிஞர் எழுதிய கவிதை வரிகள், மனைவியின் பெருமையை தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல இருக்கின்றன. இதுபோன்ற காட்சி அமைப்பு கொடுக்கப்பட்டால் இன்றைய திரையிசைக் கவிஞர் சிகாமணிகள் என்ன எழுதி இருப்பார்கள் என்று நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது...