-கவியரசு கண்ணதாசன்

பெண்பித்தனான கதாநாயகன் பாடுவதாக அமைந்த இப்பாடல், திரு. கே.பாலசந்தர் இயக்கத்தில் 1976-இல் வெளியான ‘மன்மத லீலை’ திரைப்படத்தில் இடம்பெற்றது. திரைக்கதையோட்டத்துக்கு ஏற்ப, கவிஞர் எழுதிய கவிதை வரிகள், மனைவியின் பெருமையை தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல இருக்கின்றன. இதுபோன்ற காட்சி அமைப்பு கொடுக்கப்பட்டால் இன்றைய திரையிசைக் கவிஞர் சிகாமணிகள் என்ன எழுதி இருப்பார்கள் என்று நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது...
மனைவி அமைவதெல்லாம்…
இறைவன் கொடுத்த வரம்!
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்!
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்!
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்!
மனைவி அமைவதெல்லாம்…
இறைவன் கொடுத்த வரம்!
இரவில் நிலவொன்று உண்டு…
உறவினில் சுகமொன்று உண்டு!
இரவில் நிலவொன்று உண்டு…
உறவினில் சுகமொன்று உண்டு!
மனைவியின் கனவொன்று உண்டு…
எனக்கது புரிந்தது இன்று!
மனைவி அமைவதெல்லாம்…
இறைவன் கொடுத்த வரம்!
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்!
மனைவி அமைவதெல்லாம்…
இறைவன் கொடுத்த வரம்!
பொருத்தம் உடலிலும் வேண்டும்…
புரிந்தவன் துணையாக வேண்டும்!
பொருத்தம் உடலிலும் வேண்டும்…
புரிந்தவன் துணையாக வேண்டும்!
கணவனின் துணையோடு தானே,
காமனை வென்றாக வேண்டும்?
மனைவி அமைவதெல்லாம்…
இறைவன் கொடுத்த வரம்!
மனைவி அமைவதெல்லாம்…
இறைவன் கொடுத்த வரம்!
கவிஞன் கண்டாலே கவிதை…
காண்பவன் கண்டாலே காதல்!
கவிஞன் கண்டாலே கவிதை…
காண்பவன் கண்டாலே காதல்!
அழகினைப் புரியாத பாவம்….
அருகினில் இருந்தென்ன லாபம்?
மனைவி அமைவதெல்லாம்…
இறைவன் கொடுத்த வரம்!
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்!
மனைவி அமைவதெல்லாம்…
இறைவன் கொடுத்த வரம்!
திரைப்படம்: மண்மத லீலை (1976) இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடகர்: கே.ஜே.ஜேசுதாஸ்
$$$