-கவியரசு கண்ணதாசன்
திரையுலகில் அகப்பாடல்களில் (காதல் பாடல்கள்) இனிய சொல்லாட்சியையும் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் இனிய சந்தங்களையும் தென்றலென உலவவிட்டவர் கவியரசர். இதோ மற்றொரு காதல் பாடல்... பாலும் பழமும் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே காலத்தை வென்ற, கருத்தாழம் மிக்க பாடல்கள்.

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்!
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்…
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்!
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்!
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே…
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே!
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்…
இரு விழியாலே மாலையிட்டான்!
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்…
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்!
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்!
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே…
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே!
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே…
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே!
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்…
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்!
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்!
திரைப்படம்: பாலும் பழமும் (1961) இசை: விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடகர்: பி.சுசீலா
$$$
அருமை..உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன்.
வாழ்த்துக்கள்
LikeLike