திருப்பூரில் வசிக்கும் கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம், பின்னலாடை சார்ந்த உபதொழிலில் ஈடுபடுபவர். ஆரம்பக்காலத்தில் இடதுசாரியாக இருந்தவர்; பல சிற்றிதழ்களில் பங்கேற்றவர். எளிமையான, கவித்துவம் மிக்க கவிதைகள் இவரது சிறப்பு. இவரது கவிதைகள் இனி நமது தளத்தில் தொடர்ந்து வெளியாகும். இது இவரது ‘காற்றிடைச் சாளரம்’ கவிதைத் தொடரின் முதல் கவிதை....
Day: March 26, 2022
ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’: பகுதி -3
'யாழ்ப்பாணம்' என்பது நல்ல தமிழ்ப் பெயர். அப் பெயரின் வரலாறு அறியத் தக்கதாகும். தமிழ்நாட்டுப் பழங்குடிகளில் 'பாணர்' என்பார் ஒரு வகுப்பார். பண்ணோடு பாட வல்லவர் பாணர் என்று பெயர் பெற்றார் என்பர். வைணவ சமய ஆழ்வார்களுள் ஒருவராகிய திருப்பாணாழ்வார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர். பாணர் குலத்தில் 'யாழ்ப்பாணர்' ஒரு பிரிவினர். இன்னிசைக் கருவியாகிய யாழைக் கையிலேந்திப் பாடிய பாணர் யாழ்ப்பாணர் எனப்பட்டனர். பெரிய புராணத்திற் போற்றப்படுகின்ற சிவனடியார்களுள் ஒருவராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் இவ் வகையைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணர்கள் குடியேறித் திருத்திய நகரமே 'யாழ்ப்பாணம்' என்று பெயர் பெற்றது. இவ் வழகிய ஊர்ப்பெயர் ஆங்கிலத்தில் 'ஜாப்னா' என்று சிதைந்து வழங்கு கின்றது. யாழ்ப்பாண நகருக்கு அருகே திருநெல்வேலி என்ற ஊர் உண்டு. பாண்டி நாட்டிலுள்ள திருநெல்வேலியினின்றும் ஈழநாட்டிற் குடியேறிய மக்கள் தம் ஊர்ப் பெயரிலுள்ள ஆசையால் அதனை ஆண்டு அமைத்து வழங்கினார்கள் என்று தோன்றுகிறது. இவ்வாறு இலங்கையில் குடியேறிய தமிழர், தம்மை இலங்கையராகவே கருதி வாழ்ந்து வருகின்றனர்..... திரு. ரா.பி.சேதுப்பிள்ளையின் ’தமிழ் விருந்து’ நூலின் மூன்றாம் பகுதியில் இருந்து....
சுயசரிதங்கள்: ஒரு பார்வை
மனிதர்களின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று தன்னைப் பற்றிப் பேசுவது. மற்றொன்று, இன்னொருவர் கதையைக் கேட்பது. இதுவும் சுய வரலாற்றை எழுத ஒரு காரணம். பொதுவாக சுய வரலாறு என்பது படிப்பவர்களுக்கு நம்பிக்கையும் தம் தவறுகளைச் சரிசெய்து கொள்ளவும் உதவுகிறது. ... அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் பொதுவாக சுய சரித்திரம் எழுதுவதில்லை. காரணம் அவர்கள் மேலிடத்துக் கட்டளையை நிறைவேற்றுபவர்கள் என்பதைத் தவிர சொல்லும்படியான முகமில்லை அவர்களுக்கு. ஆனால் இப்போது அவர்களுடைய எழுத்துதான் அரசியல்வாதிகளின், அதிகாரத்தில் இருப்பவர்களின் விளையாட்டுகளை வெளிப்படுத்துகிறது. எனவேதான் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் அரசின் அனுமதி பெற்றுத் தான் சுய வரலாற்றை வெளியிட வேண்டும் என நிபந்தனை வந்துள்ளது. ....