தீனதயாள் உபாத்யாயாவின் வாழ்க்கை பல எளிய உண்மைகளை நமக்குக் கற்றுத் தருகிறது. எளிமையாக வாழலாம். நேர்மையாகப் பணியாற்றலாம். அதிகாரத்தைத் தேடாமல் பொதுப்பணி செய்யலாம். உள்ளூர் திறமைகளுக்கு மதிப்பளிக்கலாம். உழைப்பை மரியாதையுடன் பார்க்கலாம். வளர்ச்சியின் விளிம்பில் இருப்பவர்களை முன்னேற்றத்தின் மையத்துக்கு அழைத்து வரலாம். அவரது ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’ மனிதனை முழுமையாகப் பார்க்கச் சொல்கிறது....
Category: சரித்திரத் தேர்ச்சி கொள்!
எளிமைக்கும் அர்ப்பணிப்புக்கும் இலக்கணமாக வாழ்ந்த விவேகானந்த கேந்திரத் தலைவர்
கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியன்று விவேகானந்த கேந்திரத்தின் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் தனது 89-ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். எளிமைக்கும், அர்ப்பணிப்புக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த அவர் ஒரு உயர்ந்த மனிதர். எப்போதுமே தன்னைப் பற்றி வெளியில் சொல்லாதவர். வாழ்நாளின் கடைசி வரைக்கும் நமது தேசம் மற்றும் பண்பாடு ஆகியவற்றுக்காக மட்டுமே சிந்தித்துச் செயலாற்றியவர்.
கோபால்ஜி நூற்றாண்டைக் கொண்டாடுவோம்!
இளமையிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் இணைந்து, தன் வாழ்வையே நாட்டிற்காக அர்ப்பணித்தவர் வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள். இன்று அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. அவரைப் பற்றி சுருக்கமான ஓர் அறிமுகம்...
பொறியியல் வானில் ஒரு துருவ நட்சத்திரம்
இந்திய பொறியியல் வானில் துருவ நட்சத்திரமாக ஒளிரும் விஸ்வேஸ்வரையாவின் பிறந்த தினம், தேசிய பொறியாளர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது....
தமிழர்களின் கலங்கரைவிளக்கம் உ.வே.சா.
ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை இறவாமல் காத்து நமக்களித்த பெருந்தகையாளர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். அவரது நினைவைப் போற்றுவது நம் கடன் என்கிறார் இளம் எழுத்தாளர் ஆதிசைவன் இரா.இராம்குமார். இது முதல் பகுதி…
நவீன இந்தியாவின் வளர்ச்சி நாயகன்
பிரதமர் நரேந்திர மோடியை மக்களுக்கு அடையாளம் காட்டியதும் வாஜ்பாய்தான். கட்சிப் பதவிகளைத் தவிர, எந்த அரசுப் பதவியும் வகித்திராத நரேந்திர மோடியை 2001-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராகத் தேர்ந்தெடுத்தது வாஜ்பாய்தான். குஜராத் முதல்வர் பதவியில் சுமார் 13 ஆண்டுகள் முத்திரை பதித்த மோடி, நாட்டின் பிரதமராக வரலாறு படைத்துக் கொண்டிருப்பதற்கும், உலகத் தலைவராக உயர்ந்திருப்பதற்கும் வாஜ்பாய் தான் காரணம்.
சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் செய்தி என்ன?
எடின்பரோவில் (ஸ்காட்லாந்து) உள்ள ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் உலகில் உள்ள மிகப் பழமையான மருத்துவக் கல்லூரி. 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டதாக அறியப்படுகிறது. அது மகரிஷி சுஷ்ருதரை கௌரவிக்க முடிவெடுத்து கடந்த ஜூன் 2026 மாதம் அவரது உருவச் சிலையை நிறுவியது. 90 கிலோ எடை கொண்ட அந்த வெண்கலச் சிலை தமிழ்நாட்டில் உள்ள சுவாமிமலையில் வடித்தெடுக்கப்பட்டது.
பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்
மறைந்த எழுத்தாளர் கவிஞர் எதிரொலி விசுவநாதன் அவர்களுக்கு ஒரு ஆத்மார்த்தமான நினைவஞ்சலி…
வாஜ்பாய் எனும் பன்முக ஆளுமை
பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், அரசியல் தலைவர், பிரதமர் என்று அடல் பிகாரி வாஜ்பாயின் பன்முகத்தன்மை விரிந்தது. இவை எல்லாவற்றையும்விட அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மிதவாதியாக இருந்தார் வாஜ்பாய். பல்வேறு மொழி, கலாசாரம் அரசியல் கட்சிகள் கொண்ட இந்தியாவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராகத் தனது 93-ஆம் வயதில் மறைந்தாலும், அனைவரது நினைவிலும் வாழ்பவர் வாஜ்பாய்.
பெருந்தலைவரும் நானும்….
கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, எழுத்தாளர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் முகநூல் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.
சியாம பிரசாத் முகர்ஜி என்னும் மகத்தான தேசபக்தர்
பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான பாரதிய ஜனசங்கத்தை நிறுவியவர் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி. அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு, இக்கட்டுரை வெளியாகிறது...
சர்வாதிகாரியை எதிர்கொண்ட அந்த நெருக்கடி நாட்கள்…
மூத்த பத்திரிகையாளரும் பிரஸார் பாரதி முன்னாள் தலைவருமான திரு. ஏ.சூரியபிரகாஷ், நாட்டை உலுக்கிய நெருக்கடி நிலையின் நினைவலைகளை தனது ‘Emergency- The Indian Democracy’s Darkest Hour’ நூலில் பதிவு செய்திருக்கிறார். இரண்டாண்டு கால சர்வாதிகாரத்துக்கு எதிரான போரை நினைவூட்டும் பல நிகழ்வுகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அதன் சில பகுதிகள் இங்கே…
இந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கியவர்
இந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கியவர்
தமிழகத்தின் போர்க்குரல் வாஞ்சிநாதன்
நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தென்னகத்தின் போராட்டக் களத்தை விலைமதிப்பு மிக்கதாக மாற்றிய நிகழ்ச்சி ஆஷ்துரை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம். ஆங்கிலேயர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் 1911, ஜூன் 17-ஆம் தேதி.
ஜம்புத்வீபப் பிரகடனம்
இந்தியாவை ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுவிக்க 1801 ஜூன் 16 அன்று மருது சகோதரர்களால் வெளியிடப்பட்ட முதல் விடுதலைப் பிரகடனம் ‘ஜம்புத்வீபப் பிரகடனம்’ ஆகும். இதுவே 1857 இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போருக்கும் முந்தைய காலனி ஆதிக்க எதிர்ப்புப் போர் முழக்கமாகும்.