ரஷ்யாவில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்தை மாகாளியின் கடைக்கண் பார்வையால் நிகழ்ந்த யுகப் புரட்சி என்று மகாகவி பாரதி பாடியபோதும், அங்கு நிகழ்ந்த வன்முறைகளில் அவருக்கு விருப்பம் இல்லை. ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து கிடைத்த செய்திகளும் அவருக்கு உவப்பாக இல்லை. ஆட்சி அதிகாரம் மிக்கவர்கள் நடத்தும் வன்முறைகளால் நாட்டு மக்களுக்கு பயனேதும் கிடைக்காது என்று அவர் தீர்மானமாக நம்பினார். எனவேதான், சுதேசமித்திரனில், தனது சந்தேகங்களை ஒரு கட்டுரையாகவும் வடித்தார். மகாகவி பாரதியின் தீர்க்கதரிசன வார்த்தைகள் இப்போது உண்மையாகி விட்டதைக் காண்கிறோம். ஆயுதபலத்தாலும், வன்முறையாலும் நாட்டு மக்களை அடக்கி வைத்திருந்த கம்யூனிஸக் கூட்டம் 1990களில் சிதிலமடைந்து வீழ்ந்ததை உலகம் கண்டது. பல்வேறு நாடுகளை ஆயுதபலத்தால் சேர்த்து ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யக் குடியரசு (யுஎஸ்எஸ்ஆர்) என்ற வல்லரசாகத் தோற்றம் அளித்த ரஷ்யா பலகூறுகளாக இன்று சிதறிவிட்டது. அங்கு இப்போது லெனின் சிலைகள் உடைக்கப்படுகின்றன; கம்யூனிஸம் ஒரு கெட்ட வார்த்தையாகிவிட்டது....
Day: March 20, 2022
அழகிய இந்தியா – நூல் அறிமுகம்
பேரறிஞர் தரம்பால் தாம் எழுதிய - அழகிய மரம், அழகிய நதி, அழகிய போராட்டம், அழகிய கிராமம் ஆகிய 4 நூல்களின் சாராம்சத்தை எளிய நடையில் அந்தந்தப் புத்தகங்களுக்கான முன்னுரையாக எழுதி இருக்கிறார். ’அழகிய இந்தியா’ என்ற இந்தப் புத்தகம் அப்படியான முன்னுரைகளின் தொகுப்புதான். தரம்பால் தொகுத்த ஆவணங்களை வேறு யாரேனும் ஒருவர் சுருக்கி எழுதுவதைவிட அவர் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பான இந்த நூல் அதிகாரபூர்வ ஆவணத்துக்கான முழு மதிப்புடனே உருவாகியிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய பாரதம் எப்படி உயரிய நிலையில் இருந்தது என்பதை பிரிட்டிஷாரின் ஆவணங்களைக் கொண்டே நிரூபித்த மகத்தான சாதனையின் கையடக்க அறிமுகம் இது.
பாரதியின் தேசிய இயக்கப் பாடல்கள்
மகாகவி பாரதி எழுத்தாளர் மட்டுமல்ல; அரசியல் செயற்பாட்டாளரும் கூட. பாலகங்காதர திலகர் தலைமையிலான காங்கிரஸ் தீவிரவாதிகள் பிரிவில் தீவிரமாக இயங்கியவர்; அதற்காக, மிதவாதிகளை (நிதானக் கட்சியார் என்று பாரதி சுட்டுவார்) கடுமையாக விமர்சித்தவர்; தமிழகத்தில் வ.உ.சி.யுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியவர். தமது அரசியல் இயக்கத்துக்காக, அவர் இயற்றிய பாடல்கள் ‘தேசிய இயக்கப் பாடல்கள்’ என்ற தலைப்பில் பகுக்கப்பட்டுள்ளன. பாரதியின் தேசிய கீதங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள இக்கவிதைகளின் எண்ணிக்கை 9. இவை அவரது தேசபக்திக் கனலை வெளிப்படுத்தும் தூய கவிதைகளாக விளங்குகின்றன.