-பி.ஆர்.மகாதேவன்
தொகுதி மறுவரையறை குறித்த நாடே விவாதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இதிலும் ஒரு மாற்றுப் பார்வையை முன்வைக்கிறார், செயலூக்கம் கொண்ட எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்…

தொகுதி மறு வரையறை – ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இவையெல்லாமே அடிப்படையில் மிகவும் தவறானவை. ஏனென்றால் இவை பொய்யான தரவுகள் மற்றும் அடையாளங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.
உண்மையில் இவையெல்லாம் ஒருவகையான திசை திருப்பல் நடவடிக்கைகளே.
எந்த அடையாளத்தின் அடிப்படையில் மக்கள் இருக்கிறார்களோ, அல்லது எந்த அடையாளங்கள் செல்வாக்கு செலுத்துகின்றனவோ அவற்றின் அடிப்படையில்தான் எல்லா வரையறைகளும் திட்டங்களும் சலுகைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஒரு நாட்டில் சிங்களர்கள் செல்வாக்குடன் இருக்கிறார்கள்; தமிழர்கள் செல்வாக்கு குறைவாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நாட்டில் முன்னெடுக்கப்படும் அனைத்தையும் அது சிங்களர்களுக்கு நன்மை செய்கிறதா, தமிழர்களுக்கு நன்மை செய்கிறதா என்ற அடிப்படையிலேயே பார்க்க வேண்டும்.
கிராமத்தினர், நகரத்தினர் என்றோ, ஏழை – பணக்காரர் என்றோ, ஆண் – பெண் என்றோ, வடக்கு தெற்கு என்றோ பார்ப்பது போதுமானதாக இருக்காது. ஏனென்றால் சிங்கள ஆதிக்கம் நிலவுகிறதென்றால், அவர் ஏழையாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், வடக்கில் இருந்தாலும், அவர் சிங்களர் என்பதே அவருக்கு அனைத்து நன்மைகளையும் பெற்றுத் தரும். எனவே அங்கு சமநிலையைக் கொண்டுவருவதென்றால் ‘சிங்களர் நலன் – தமிழர் நலன்என்று பார்ப்பதே சரியாக இருக்கும்.
கொழும்புவில் இருக்கும் தமிழர்கள் மிகவும் ஆடம்பரமாக சுகபோக வாழ்க்கை வாழ முடிந்தவர்களாக இருப்பார்கள். ஈழத்தில் இருக்கும் சிங்களர் நலிவடைந்தவராக இருப்பார். இதுவும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால், இவர்கள் விதிவிலக்குகள். எனவே, பிரதான அரசியல் என்பது சிங்களர் – தமிழர் என்பதாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் (அப்படித்தான் எடுக்கப்பட்டது).
இப்போது இதில் இன்னொரு திருப்பம் வருகிறது.
உண்மையில் கொழும்புவிலும் ஈழத்திலும், சிங்கள கிறிஸ்தவரும் தமிழ் கிறிஸ்தவருமே செல்வாக்குடன் இருந்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அரசியல் எப்படி முன்னெடுக்கப்பட்டிருக்கவேண்டும்? கிறிஸ்தவர் மற்றும் கிறிஸ்தவர் அல்லாதவர் என்றுதானே முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்?
உண்மை அடையாளம் எது என்பதையும், எந்த அடையாளம் செல்வாக்கு செலுத்துகிறது என்பதையும் புரிந்துகொள்ளாத போராட்டத்தால், சிங்களர்களும் தமிழர்களும் செத்தார்கள். அதாவது சநாதன இந்துக்களும் பெளத்தர்களும் செத்தார்கள். வந்தேறி முஸ்லிம்களும் வன்முறைகளுக்கு ஆளானார்கள். ஓடுகாலி கிறிஸ்தவர்கள் சுக வாழ்க்கையில் வாழ்ந்தனர். அவர்களுடைய அதிகாரம் மேலும் பலப்பட்டது.
பங்களாதேஷிலும் இதுவே நடந்தது.
அங்கு அப்பாவி இந்துக்கள், ‘நாமெல்லாம் வங்காளிகள்’ என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். கிழக்கு பாகிஸ்தானிய முஸ்லிம்கள் அனைவரும் ‘நாங்களும் வங்காளிகளே’ என்று சொல்லிக்கொண்டு தனிநாடு கேட்டார்கள். இந்தியா ஓடோடிச் சென்று வங்காள தேசத்தை உருவாக்கிக் கொடுத்தது. அடுத்த நாளே வங்காள தேச முஸ்லிம்கள் இந்துக்களை (பெருமளவுக்கு தலித்களை) அடித்து விரட்டினர்.
மேற்கு வங்க கம்யூனிஸ்ட்கள் அவர்களை இந்து அகதிகள் என்பதால் தம் பங்குக்குச் சுற்றிவளைத்து வேட்டையாடினர்.
ஓர் இந்து, கடைசி வரை தன்னை இந்துவாக உணரவே இல்லை. இந்து அல்லாதவர்களோ, அவரை கடைசி வரை இந்துவாகவே (காஃபிராகவே) பார்த்தனர்.
ஒரு வங்காள முஸ்லிம், ஆதி முதல் அந்தம் வரை முஸ்லிமாகவே இருந்தார்; இருக்கிறார்; இருப்பார்.
தொகுதி, பிராந்தியம், மொழி என்றெல்லாம் பேசப்படுபவற்றின் அபத்தமும் அபாயமும் புரிகிறதா?
இப்போது தொகுதி மறு வரையறைக்கு வருவோம்.
இங்கு வட மாநிலங்களின் மக்கள்தொகை அதிகரித்திருக்கிறது. எனவே அவர்களுக்கு அதிக எம்.பி.க்கள் கிடைத்துவிடும் என்று தென் மாநிலங்கள் (?) போர்க்குரல் எழுப்புகின்றன. உண்மையில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்துக்கள்தான் போர்கொடி ஏந்த வேண்டும்.
தொகுதி மறு வரையறை என்பது இந்துத்தன்மை கொண்ட இந்துக்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
ராகுல், மம்தா, ஸ்டாலின், ராசா, திருமாவளவன் எல்லாருமே இந்துக்கள் தான். அதாவது சான்றிதழ்படி இந்துக்கள். பல மாநிலங்களில் இப்படியான ‘சான்றிதழ் இந்து’க்களின் பிரதிநிதித்துவமே மிக அதிகமாக இருக்கிறது.
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 40 எம்.பி.க்களுமே தமிழர் நலனையோ இந்து நலனையோ முன்னெடுப்பவர்கள் அல்ல. க்ரிப்டோ நலனை முன்னெடுப்பவர்கள். இவர்கள் தம்மை தென்னகத்தின் பிரதிநிதியாகச் சொல்லிக் கொள்வதென்பது பச்சை அயோக்கியத்தனம்.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் அத்தனை பேரும் அவர்கள் இந்துக்களாக இருந்தாலும் கிறிஸ்தவராக இருந்தாலும், கிறிஸ்தவ நலனை மட்டுமே முன்னெடுக்க முடியும்.
ஆக, இந்துக்களின் பிரதிநிதிகள் மட்டுமே இந்து விரோதிகளாக இருப்பார்கள். கிறிஸ்தவ இஸ்லாமியப் பிரதிநிதி, கிறிஸ்தவ, இஸ்லாமிய விரோதியாக இருக்கவே முடியாது. உண்மையில் அவர்கள்தான் அப்படி இருந்தாக வேண்டும். அதாவது அவர்கள் இந்திய நலனைப் பிரதானமாகக் கொண்டவர்களாக இருந்தாக வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இருப்பதில்லை.
இந்திய இஸ்லாம் என்பது, இந்திய – இந்துத்தன்மையை அழிப்பது மட்டுமே.
உண்மையில் இந்தியாவில் தொகுதி வரையறையோ பிற எந்தப் பகுப்போ நலத்திட்டமோ அதை முன்னெடுப்பதாக இருந்தால், இது இந்துக்களுக்கு நன்மை தரக்கூடியதா… இந்து விரோதிகளுக்கு நன்மை தரக் கூடியதா என்றே பார்க்க வேண்டும்.
தொகுதி மறு வரையறை என்பதை எடுத்துக்கொண்டால், உத்தரபிரதேசத்தில் மக்கள் தொகை அதிகரித்திருப்பதென்றால் உத்தர பிரதேச இந்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்திருக்கிறது; உத்தர பிரதேச முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். தமிழகத்திலுமேகூட குடும்பக் கட்டுப்பாடெல்லாம் செய்துகொண்டு நாங்கள் நவீன வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என்று திராவிட மாடல் கும்பல் அதைத் தமிழகத்தின் பெருமையாகச் சொல்கிறார்களென்றால், உண்மையில் தமிழகத்திலும் இந்துக்களின் எண்ணிக்கைதான் குறைந்திருக்கிறது.
ஆக, மக்கள் தொகை அதிகரித்திருப்பதாகச் சொல்லி அதிக எம்.பி.க்களைப் பெறும் இடங்களிலும் முஸ்லிம்களின் செல்வாக்கே அதிகரித்துவருகிறது. மக்கள் தொகையில் கட்டுப்பாட்டுடன் இருக்கிறோம் என்று சொல்லி இங்கிருக்கும் பிரதிநிதித்துவத்தையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள்.
எனவே, தொகுதி வரையறை என்பதை இந்தியர்கள் வடக்கு – தெற்கு – வட கிழக்கு பிராந்தியம், மொழிவழி மாநில பிரதிநிதித்துவம் என்றெல்லாம் பார்க்கவே கூடாது.
எந்தவொரு தொகுதியிலும் கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிமின் எண்ணிக்கை அந்தத் தொகுதி பிரதிநிதியைத் தீர்மானிக்கும் அளவுக்கு செல்வாக்கு கொண்டதாக ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இஸ்லாமியரின் எண்ணிக்கை ஒரு தொகுதியில் 30 % என்ற நிலையை எட்டினாலே அது ‘மினி இஸ்லாமாபாதாக’ மாறிவிடுகிறது. கிறிஸ்தவப் பெரும்பான்மை இருந்தால் அது நாக மண்டலமாக, நாகர் பிரதேசமாக ஆகாமல் ‘நாகாலாந்து’ என்று ஆகிவிடுகிறது (இங்கிலாந்து, அயர்லாந்து போல).
எனவே, காஷ்மீரை மீட்பதென்றால் அங்கு இந்துக்கள் – பண்டிட்கள் 70 % குடியேற வேண்டும்.
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இருவரும் சேர்ந்து 20 % என்ற அளவில் இருந்தால்கூட அந்த இரண்டு வல்லாதிக்க மதங்களின் சர்வாதிகாரத் தலைமைகள் ஒன்று கூடிப் பேசி ‘இந்து விரோதம்’ என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்துகொண்டு மக்கள் பிரதிநிதிகளை மிரட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்படியான நிலையில் வடக்குக்கு 600 எம்.பி.க்களா, தெற்குக்கு 200 எம்.பி.க்களா என்ற மயிர்பிளக்கும் வாதங்கள் எல்லாம் அபத்தமானவையே.
நீ ஆயிரம் இந்து எம்.பி.க்களைக் கொண்டுவந்தாலும் நான் ஆயிரத்திலும் க்ரிப்டோக்களை நிரப்புவேன் என்ற கள்ளப் பாதிரியின் / திருட்டு மெளல்வியின் அரசியலைப் புரிந்துகொள்ளாமல் செய்யப்படும் எந்த மாற்றமும் எந்தப் பலனையும் தராது. எந்த முன்னேற்றமும் உண்மையான பலனைத் தராது.
இது இந்துக்களின் பிரச்னை மட்டுமே அல்ல; இந்திய தேசியத்தின் பிரச்னை.
இஸ்லாமியரிடமும் கிறிஸ்தவரிடமும் இந்துத்தன்மை இருந்தாலே அவர்களுக்கும் நல்லது; இந்தியாவுக்கும் நல்லது.
‘நேஷன் ஃபர்ஸ்ட்’ என்பது உண்மையென்றால், அதையாவது ஒழுங்காக நடைமுறைப்படுத்த வேண்டும்.
சீனாவில் மாவோயிஸ பொலிட்பிரோவை எதிர்த்து எந்த மதமும் எதையும் செய்துவிட முடியாது.
இஸ்லாமிய நாடுகளில் அயல் நாட்டினர் கம்பெனி நடத்த வந்தாலும், ஒரு மார்க்கப்பற்றுள்ள இஸ்லாமியரை பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டே ஆக வேண்டும். அங்கு ஆண் தேனீ (மெளல்விகள்), பெண் தேனீ (காலிஃபேட் அரசுகள்) மார்க்கப் பெருக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுவார்கள். அயல் நாட்டு தொழில் நுட்ப நிபுணர்கள், தொழில் முனைவர்கள், வணிக முதலைகள், விஞ்ஞானிகள் எல்லாரும் வேலைக்காரத் தேனீக்களாக உழைத்து கூட்டை நிரப்பியதுபோக, மீதித் தேனை ருசித்துக் கொள்ளலாம்.
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அங்கு ஆதிக்கம் செலுத்தும் கிறிஸ்தவத்தை விமர்சிக்க அனுமதி உண்டு. ஆனால் அவர்களுக்கு தமது மத அதிகாரத்தையும் தேச அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்ளத் தெரியும். நம் திரைப்படங்களில் ‘சிரிப்பு போலீஸ்’ என்று கிண்டலடிக்க தமிழக காவல்துறை அனுமதிக்கும். ஏனென்றால் லாக்கப் மற்றும் போலீஸ் ஸ்டேஷனில் மட்டுமல்ல; பொது வெளியிலும் ஒரு போலீஸ்காரரின் அதிகாரத்தைத் தக்கவைப்பது எப்படி என்று தெரியும். எனவே காக்கி உடை அணிந்துகொண்டு காமெடி செய்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.
இந்தியாவின் நிலை அப்படி அல்ல. இங்கு பேசப்படும் இந்து விரோதம் உண்மையான இந்து அழிவைக் கொண்டுவருகிறது. இங்கு பேசப்படும் இந்திய விரோதம் உண்மையான இந்திய அழிவைக் கொண்டுவருகிறது. இந்து பேசும் நல்லிணக்கம் இந்துவுக்கே குழி பறிப்பதாக ஆகக் கூடாது. எனவே அமெரிக்க ஐரோப்பிய பாணி கருத்து சுதந்தர ஜல்லிகள் நமக்குப் போதாது.
இஸ்லாமிய, கம்யூனிஸ சர்வாதிகாரமும் நமக்குத் தேவையில்லை. நடுவழிப்பாதையாக நாம் பிரிவினைவாதத்துக்கு இரும்புக் கை; கலாசார நல்லிணக்கத்துக்கு பஞ்சுக் கையுறை என்று செயல்பட்டாக வேண்டும்.
543 நாடாளுமன்றப் பிரதிநிதிகளை ‘இந்தியா என் தாய் நாடு; இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்’ என்பதற்கு பதிலாக ‘இந்து தர்மமே என் தாய் மதம்; இந்து கலாசாரத்தினர் அனைவரும் என் உடன் பிறந்தோர்’ என்று உறுதிமொழி எடுக்கவைக்கவேண்டும்.
மறு வரையறை செய்யப்படவேண்டியவை, தொகுதிகளின் எல்லைகள் அல்ல; மதங்களின் எல்லைகள்.
$$$