-வ.மு.முரளி, காலச்சக்கரம் நரசிம்மா, ஜெயகுமார் ஸ்ரீநிவாசன், துக்ளக் சத்யா
சுதந்திர தினத்தன்று தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வந்தே மாதரம் பாடியதை நிறுத்த அக்கட்சியின் தலைவி சோனியா முயன்றது சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. அது தொடர்பான 4 கண்டனங்கள் இங்கே…

1. வந்தேமாதரம் என்போம்!
-வ.மு.முரளி
‘வந்தேமாதரம்’ இந்த தேசத்தை தட்டி எழுப்பிய மந்திரச்சொல்.
இந்த மந்திரம் இடம்பெற்ற அற்புதமான பாடல் வந்தேமாதர கீதம்.
இப்பாடலில் பாரத அன்னையை முப்பெரும் தேவியாக வர்ணிக்கிறார் வங்க மகாகவி பங்கிம் சந்திர சட்டர்ஜி.
இதனை தமிழில் இரு கவிதைகளாக மொழிமாற்றம் செய்து வழங்கி இருக்கிறார், தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதி.
‘வந்தேமாதரம்’ பாடலை 1904 வங்கப் பிரிவினைக்கு எதிராக இந்து – முஸ்லிம் சகோதரர்கள் ஒருங்கிணைந்து முழங்கி, பிரிவினையைத் தகர்த்தார்கள்.
ஆனால் பின்னாளில் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கு அடிபணிந்து, மகத்தான வந்தேமாதர கீதத்தை வெட்டி ஊறு செய்தது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி.
1923, காகிநாடா காங்கிரஸ் மாநாட்டில் வந்தேமாதரம் பாட மௌலானா முகமது அலி எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு காங்கிரஸ் தலைமை மண்டியிட்டது. எனினும் அதைப் பொருட்படுத்தாமல், காங்கிரஸ் நிர்வாகி விஷ்ணு திகம்பர பலுஸ்கர், முழு வந்தேமாதர கீதத்தையும் காங்கிரஸ் மாநாட்டில் பாடினார். அதன்பிறகே அந்த மந்திர கீதம் வெட்டப்பட்டது.
அண்மைக்காலம் வரை நாம் பாடி வந்த வந்தேமாதரம், வெட்டப்பட்ட பின் விட்டுவைக்கப்பட்ட பாடலின் முதலிரு சரணங்கள் தான்.
இந்த வரலாற்றுப்பிழையை தற்போதைய மோடி அரசு திருத்தி இருக்கிறது. முழுமையான வந்தேமாதர கீதம் இப்போது தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலுக்கு இணையான அந்தஸ்து பெற்றிருக்கிறது.
இந்த முழுமையான பாடல் காங்கிரஸ் தலைமையக சுதந்திர தினவிழாவில் நேற்று (15.08.2026) இசைக்கப்பட்டது.
அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, கார்கே, ராகுல் ஆகியோர் அவமரியாதை செய்திருக்கிறார்கள். பிறகு வேறு விளக்கம் அளித்துள்ளனர். அதனை ஏற்க முடியாது.
அவர்களின் நடத்தை வன்மையான கண்டனத்திற்குரியது. அவர்களது எரிச்சலைக் கண்டுகொள்ளாமல் முழு வந்தேமாதர கீதத்தையும் இசைக்கச் செய்த காங்கிரஸ் தொண்டரை நாம் பாராட்ட வேண்டும்.
தேசியப்பாடலை அவமதிப்பது தண்டனைக்குரியது என சட்டம் கொண்டுவரப்பட்டு சில நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது வஞ்சகத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
1923இல் வந்தேமாதர கீதம் பிளக்கப்பட்டது, மதவாதிகளை தாஜா செய்யவே. அதன் தொடர்ச்சியாக இந்த நாடு 1947இல் மத அடிப்படையில் பிளக்கப்பட்டது.
அந்த வரலாறு திரும்ப வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்புகிறதா?
காங்கிரஸ் கட்சியின் பண்பாடற்ற இந்தப் போக்கை தேசிய சிந்தனைப் பேரவை கண்டிக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் தேசபக்தர்கள் அனைவரும் தலைமையைத் திருத்த வேண்டும்.
ஊடகங்களும் நடுநிலையாளர்களும், காங்கிரஸ் கட்சியின் இந்தப் பொருளற்ற செயலைக் கண்டிக்க வேண்டும்.
சுதந்திரத்தின் 80வது ஆண்டில், வந்தேமாதர கீதத்தின் 150வது ஆண்டில், தேசியப்பாடலின் சிறப்பை அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு செல்வது நமது தலையாய கடமையாகும்.
-வ.மு.முரளி,
மாநில அமைப்பாளர்,
தேசிய சிந்தனைப் பேரவை,
தமிழ்நாடு
16.08.2026.
$$$
2. God Save Our Queen, Sonia Gandhi!
-காலச்சக்கரம் நரசிம்மா
வந்தே மாதரம் இசைக்கும் போதினில் யாராவது, பக்கத்தில் நிற்பவருக்கு நாற்காலி போடுங்கள் என்று சொல்வாரா? மக்களை ‘கேனையன்’ என்று காங்கிரஸ் கட்சி நினைத்து கொண்டிருக்கிறது .
வந்தே மாதரம் பாடும்போது , Stop என்று முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க சோனியா கூறுவது, சென்னையில் இருந்து உட்கார்ந்து பார்க்கும் எனக்கே தெரிகிறது.
‘வெள்ளையனே வெளியேறு’ என்று கோஷமிட்டு உயிரை இழந்த நம் முன்னோர்களுக்கு, ஒரு வெள்ளைக்காரரைத் தலைவராக்கி, அவரை அன்னை என்று அழைத்து, முன்னோர்களின் தியாகத்தையும் நாட்டையும் நன்றாகக் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் ,
நேரு ஆனந்தபவனை நாட்டுக்கு அர்ப்பணித்து இருக்கலாம். இந்திரா பங்களாதேஷ் போரில் வெற்றி பெற்று இந்தியாவின் புகழை பரவச் செய்திருக்கலாம். ஆனால் சோனியாவை மருமகளாகக் கொண்டு வந்து, நாட்டின் ஆனந்தத்தை அவர்கள் கெடுத்து விட்டார் என்று தான் சொல்ல தோன்றுகிறது .
மக்கள் வெள்ளைக்கார பெண்மணிகளை ஏற்க மாட்டார்கள் என்பதெல்லாம் இங்கே கிடையாது. சிஸ்டர் நிவேதிதா என்கிற மார்கரெட் எலிசபெத் , அரவிந்தாஷ்ரம் மதர் என்கிற பிளான்ச் ரேச்சல் மிரா அல்ஃபாஸா (Blanche Rachel Mirra Alfassa) என்று பல வெள்ளைக்கார பெண்மணிகளை சிஸ்டர், மதர் என்று ஏற்றுள்ளனர், நம் மக்கள் . மதர் என்று சிலர் தெய்வமாகவும் வணங்கி வருகிறார்கள் .
ஆனால், ஏன் சோனியாவை ஏற்க தயக்கம் காட்டுகிறார்கள்? நிவேதிதா, அன்னை மிரா இருவரும் நம் கலாச்சாரத்தை ஏற்று அதன்படி வாழ்ந்தார்கள். சோனியா, இன்னும் நமது கலாச்சாரத்தை ஏற்க மறுக்கிறார். அரசியல் அதிகாரத்திற்காக மட்டுமே இந்தியாவில் தங்கி இருக்கிறார். எனவேதான் காங்கிரஸுக்கு வாக்களிப்பதை மக்கள் நிறுத்தி விட்டார்கள் .
காந்தி குடும்பத்தை தூக்கிக் கடாசிவிட்டு, இந்தியாவை நேசிக்கும் ஒரு தலைவரை கட்சியை வழிநடத்த வைத்தால்தான் காங்கிரஸ் உருப்படும் .
1991 தேர்தல் வரையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததற்காக நான் உண்மையிலேயே வெட்கப்படுகிறேன்.
அப்படிதான் வந்தே மாதரத்தை ஒரு வெள்ளைக்கார பெண்மணியை வைத்து அவமதிப்போம், மக்கள் சகித்து கொண்டுதான் தீர வேண்டும் என்று காங்கிரஸ் நினைத்தால், சுதந்திரத்திற்காக போராட்டமே செய்திருக்க வேண்டாமே?
சோனியாவுக்கு காந்தி பாடிய தேசப்பாடல் வந்தே மாதரம் பிடிக்கவில்லை என்றால் , அதைப் பாடாமல் , God Save the Queen — என்று இங்கிலாந்தின் தேசிய கீதத்தைப் பாடியிருக்கலாமே !
சோனியா குடும்பம் காங்கிரஸ் தலைமையை அலங்கரிக்கும் வரையில், பாஜக, மிக மோசமான ஆட்சியை வழங்கினாலும் , மீண்டும் அந்தக் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் .
காரணம் , மக்கள் திறமையின்மையை சகித்து கொள்வார்கள்; தேச அவமதிப்பை ஒருநாளும் ஏற்க மாட்டார்கள்.
- நன்றி: எழுத்தாளரின் முகநூல் பதிவு.
$$$
3. நிர்மூடனை வளர்க்கும் மோசமான அம்மா!
-ஜெயகுமார் ஸ்ரீநிவாசன்
காங்கிரஸ் கட்சியினரின் தேச அவமதிப்புகளும், தேசிய சின்னங்கள் அவமதிப்புகளும் எப்போதும் போலத் தொடர்கின்றன.
இன்றைக்கு (ஆக. 15) வந்தே மாதரம் பாடப்படுகையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவருமே ‘வேண்டா வெறுப்பாக பிள்ளை பெற்று அதற்கு காண்டாமிருகம் என பெயர் வைத்த கதையாக’ இந்திய சுதந்திர தினம் போன்ற ஒரு முக்கியமான நாளில், தேசத்தைக் குறித்து பெருமையாக நடந்து கொள்ள வேண்டிய ஒரு நாளில், தேசத்தின் மீது எந்த மரியாதையோ, அன்போ, பற்றோ இல்லாத ஒரு நாலாந்தர கூட்டம் எப்படி நடந்து கொள்ளுமோ அப்படி நடந்து கொண்டுள்ளனர்.
நாளை தனது முதிரா மூளையுடைய மகன் ஆட்சியைப் பிடிப்பதற்காக இப்படி தேசத்தை வாழ்த்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டி இருக்கிறதே என்பதை குறித்த எரிச்சலும், கோபமும் சோனியாவின் ஒவ்வொரு செயலிலும் தெள்ளத் தெளிவாக தெரிந்தது.
அதிலும் சோனியா காந்தியின் முகம் நிகழ்கால வாழ்க்கையில் ராட்சசி என்ற பதத்திற்கு உதாரணமாக இருந்தது. நாம் ராட்சசிகள் என்றால் எப்படி இருப்பார்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு முகம் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது இன்றைய சோனியாவின் முகம். தெளிவாகத் தெரிந்தது அவரது கோபமான உடல் மொழியும், அங்க அசைவுகளும்.
‘ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க!’ என்ற பழமொழி வேறு யாருக்குப் பொருந்துமா இல்லையோ சோனியா காந்திக்கும் அவரது தறுதலை மகனுக்கும் மிகச் சிறப்பாகப் பொருந்தும்.
தான் வாழும் நாட்டிற்கு விசுவாசமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால், அதன் மரியாதைக்குரிய ஒவ்வொரு விஷயத்தையும் அவமதிப்பது மற்றும் அதை கேவலப்படுத்துவது எல்லாம் செய்துவிட்டு, அடுத்த பிரதமராக ஆசைப்படுவதெல்லாம் இந்திய வாக்காளர்களின் முட்டாள்தனத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் அபார நம்பிக்கையை காட்டுகிறது.
சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி என்ற பொய்யை இன்னும் ஒரு முறை சொன்னால் வாக்கு போட்டு விடுவார்கள் என நம்பி கொண்டு இருக்கிறார்கள், தேசத்துரோகத்தை மட்டுமே வாழ்க்கை முறையாக கொண்டிருக்கும் கூட்டம்.
பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூடத் தெரியாத ஒரு நிர்மூடனை மகனாக வளர்த்து விட்டு அவனை அரியணை ஏற்ற துடிக்கும் ஒரு மோசமான அம்மாவாக சோனியா காந்தி இன்று அடுத்த நிலைக்கு உயர்ந்தார்.
இந்திய நாடு இந்த மோசமான கும்பல்களின் கையில் இத்தனை ஆண்டுகள் இருந்தும் எப்படி உயிர் பிழைத்து இருந்தது என்பதுதான் ஆகப் பெரிய ஆச்சரியம்.
இனிமேல் எவனாவது காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி எனச் சொன்னால் அவனை பாதுகையால் அடித்து திருத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. இன்றைய காங்கிரஸ் என்பது தேசத் துரோகிகளின் கூடாரம். இந்தியாவை அழித்து விடுவதற்காக இந்தியாவின் எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு சொந்த நாட்டையே அழிக்கும் கரையான்கள் இன்றைய காங்கிரஸ்காரர்கள்.
இனி அவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. நாம் தான் கவனமாக நமது வாக்கை ஒவ்வொரு தேர்தலிலும் கவனமாக செலுத்த வேண்டும்.
- நன்றி: நண்பரின் முகநூல் பதிவு.
$$$
4. காங்கிரஸ் வளர்ச்சிக்கு தடைக்கல் சோனியா தான்!
-துக்ளக் சத்யா
புது தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் (15.08.2026) வந்தே மாதரம் பாடலைத் தடுக்க சோனியா முயன்ற விடியோவைப் பார்த்த பின், அவர் மீதான கொஞ்சநஞ்ச மதிப்பும் கேள்விக்குறியாகி விட்டது.
அப்படி பதறும் அளவுக்கு அப்பாடலின் மீது அவருக்கு என்ன கசப்புணர்வு என்றே புரியவில்லை. அப்படியே எதிர்பாராத விதமாக பாடப்பட்டிருந்தால் கூட ஒரு ஐந்து நிமிடம் அதைப் பொறுத்துக் கொள்வது அவ்வளவு கஷ்டமான செயலா?
எப்படியாவது அதை உடனே நிறுத்த அவர் மேற்கொண்ட நடவடிக்கையும் அவரது உடல் மொழியும், தேசபக்தி என்பது அவரிடம் கடுகளவும் இல்லை என்றே காட்டுகிறது.
சமீபத்தில்தான் தேசிய கீதத்துக்கு சமமாக வந்தே மாதரம் பாடலும் மதிக்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்துக்கு அவர் அளிக்கும் மரியாதை எவ்வளவு என்று தெளிவாகப் புரிந்து விட்டது.
கார்கே அவர்களுக்கு நாற்காலி போடத்தான் அவர் அப்படி பதற்றப்பட்டதாக காங்கிரஸ் தரப்பு கூறுவது சற்றும் நம்பும்படியாக இல்லை. சில நிமிடங்கள் கூட நிற்க முடியாத அளவுக்கு கார்கேயின் உடல் நிலை இருப்பதாகவும் தெரியவில்லை.
பின்,ஏன் இப்படி வேஷம் போட வேண்டும்?
சோனியாவும் சரி, ராகுலும் சரி, காங்கிரஸின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாகவே இருக்கின்றனர்.
நாட்டில் ஒரு தேசியக் கட்சி எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்பதால் காங்கிரஸ் அழிந்து விடக் கூடாது என்று சோ விரும்பினார். அவர் மனதில் நினைத்தது நிச்சயமாக இன்றிருக்கும் காங்கிரஸாக இருக்காது.
- நன்றி: பத்திரிகையாளரின் முகநூல் பதிவு.
$$$