சோசலிசம் என்னும் கைவிலங்கு

1955 இல் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் 'சோசலிச சமுதாயமே' தனது அரசின் லட்சியம் என்று தீர்மானம் இயற்றினார். அரசின் முன்னெடுப்பிலான வளர்ச்சியை வலியுறுத்தி கொள்கைகள் உருவாக்கப்பட்டன. தனியார் தொழில் முனைப்பை  ‘பர்மிட் - லைசன்ஸ் – கோட்டா’ மூலம் கட்டுப்படுத்தும் ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் விளைவுகள் விரைவில் வெளிப்பட்டன.