பாரதி ஆய்வாளரான ரா.அ.பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து, ‘சித்திர பாரதி’ என்ற நூலை வெளியிட்டார். 1957ல் முதலில் வெளியான இந்த நூலில், பாரதியாரின் கடைசி சில தினங்கள் எப்படியிருந்தன என்ற தகவல்களை மிக நுணுக்கமாகத் தொகுத்திருக்கிறார் அவர். அதிலிருந்து சில பகுதிகள்:
Day: February 22, 2023
காவியில் பூத்த கனல்
திரு. ஆர்.பி.சாரதி ஆசிரியராகப் பணியாற்றியவர்; கல்வித்துறை துணை இயக்குனராக ஓய்வு பெற்றவர்; 1953 முதல் எழுத்தாளர். சிறந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் போன்ற விருதுகளைப் பெற்றவர். திரு.ராமச்சந்திர குஹாவின் ‘காந்திக்குப் பிறகு இந்தியா’, இலங்கையின் வரலாறு கூறும் ‘மஹாவம்சம்’, முகலாய மன்னர் பாபரின் சரித்திரமான ‘பாபர் நாமா’ ஆகியவற்றை தெள்ளுதமிழில் வழங்கியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…