நாகரீகத்தின் ஊற்று

முற்காலத்தில் நாம் எத்தனை உயர்ந்த நிலைமையிலிருந்து உலகத்திற்கு எத்தனை அரிய நலங்கள் செய்தபோதிலும் இப்போது நாம் சரியான நிலைமையி லில்லாதிருப்போமானால் நமதுபண்டைக் காலப் பெருமை யாருக்கும் நினைப்பிராது. இன்று மீண்டும் நமது தேசம் அபூர்வமான ஞானத்திகழ்ச்சியும் சக்திப் பெருக்கமும் உடையதாய்த் தலைதூக்கி நிற்பதே நமது பெருமையைக் குறித்து ஸ்ரீமான் க்ளெமான்ஸோ முதலியவர்கள் மேலே காட்டியபடி பூஷித்துப் பேசக் காரணமாகிறது.