நேசக் கக்ஷியாரின் “மூட பக்தி’’

மகாகவி பாரதி உலகப் பத்திரிகைகள் பலவற்றை தினந்தோறும் வாசித்தவர். அவற்றில் உள்ள செய்திகளை தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த தமிழாக்கி வழங்கியவர். கீழுள்ள செய்தி, அவ்வாறு சுதேசமித்திரனில் இதழாளர் பாரதி அளித்த செய்தி. ஐரோப்பியக் கண்டத்தில் நேசக்கட்சியாரின் ஆதிக்கத்தில் ஜெர்மனி நாட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்த செய்தி இது. இச்செய்தியில் பாரதியின் உலக அரசியல் அறிவையும், அதிலும் இந்தியா தொடர்பான அவரது மன ஏக்கத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். “மனுஷ்ய ஸஹோதரத்வம், ஸமத்வம் இவை ஐர்லாந்துக்குண்டா, இல்லையா? அரபியாவுக்கும் மெஸ்பொடோமியாவுக்கும், இந்தியாவுக்கும், எகிப்துக்கும் அவை உண்டா, இல்லையா? இல்லை யெனில், ஏன் இல்லை?” என்ற கேள்வியில் ஜொலிக்கும் உரிமைக்குரல், மகாகவி பாரதிக்கே உரித்தான இதழாளனின் நெஞ்சக்கனல்.

விவேகாநந்தர் (கவிதை)

கவிஞர் திரு. பெ.சிதம்பரநாதன், வானம்பாடி இயக்க கவிஞர்களுள் ஒருவர்;  கோவையில் வசிக்கிறார்.  ’ஓம் சக்தி’  ஆன்மிக, இலக்கிய மாத இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர்; ‘அரண்மனைத் திராட்சைகள், வைகறை, பொய்கை’ஆகிய கவிதை நூல்களையும், ‘சிந்திக்கத் தூண்டிய சில விவாதங்கள்’ என்ற கட்டுரை நூலையும் எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது கவிதை இது….