–கவியரசு கண்ணதாசன்
‘சுமைதாங்கி’ திரைப்படத்தில் இடம்பெற்ற கவியரசரின் இப்பாடல், காலத்தை வென்று ரீங்கரிக்கும் இனிய தத்துவப் பாடல்; வாழ்வில் கலக்கம் சூழும் தருணங்களில் மனம் தெளிவு பெறக் கேட்க வேண்டிய அற்புதமான திரைப்பாடல்….

மயக்கமா, கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்!
வாசல்தோறும் வேதனை இருக்கும்!
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!
மயக்கமா, கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு!
நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி!
நினைத்து பார்த்து நிம்மதி நாடு!
மயக்கமா, கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
திரைப்படம்: சுமைதாங்கி (1962) இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர்: பி.பி.ஸ்ரீநிவாஸ் நடிப்பு: ஜெமினி கணேசன்
$$$