ஐம்புலன்களை அடக்குவதன் மூலம் நாம் ஆண்டவனுக்கு மிக அருகில் வருகிறோம். அவ்வாறு அடக்குதல் எளிதா? ஐம்புலன்களின் வேட்கையை அழிக்க முடியாது என்றபோதிலும், அதனை அடக்குவதற்கு இறைவன் கொடுத்த ஒழுக்க வழிமுறைகளிலே வழுவாது நிற்க வேண்டும் என்பதை திருக்குறள் உள்ளிட்ட அற நூல்கள் வலியுறுத்துகின்றன. அதுசரி, நினைத்தாலே கடினமாக இருக்கக்கூடிய இந்தச் செயலை நம்மால் கடைப்பிடித்து ஒழுக முடியுமா? முடியும். அதற்கு, ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என அடியெடுத்துக் கொடுக்கிறது திருவாசகம்.
Day: June 25, 2022
பாரதியின் ஞானப்பாடல்- 20
‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற அற்புதமான வாசகத்தைக் கொண்ட இனிய கவிதை இது... கவலைகளால் குமையாமல், களிப்புடன் வாழ நமக்கு வழிகாட்டுகிறார் மகாகவி.