அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது மாணவர்களுடன் கலந்துரையாடி, கேள்விகள் கேட்டு, அவர்களை ஊக்கப்படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அப்படி ஒரு முறை (2006இல்) ஆந்திராவில் ஒரு பள்ளியில் மாணவர்களிடையே 'நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?' என்ற கேள்வியைக் கேட்டார். ஒரு மாணவர் எழுந்து நின்று 'இந்தியாவின் முதல் பார்வையற்ற ஜனாதிபதியாக விரும்புகிறேன்' என்று பதிலளித்தான். அவரது பெயர் ஸ்ரீகாந்த் பொல்லா. பிறவியிலேயே கண் பார்வையற்றவர்.....
Day: June 5, 2022
சத்திய சோதனை- 2(1-5)
குருவைக் குறித்தும், ஆன்ம ஞானத்தை அடையும் விஷயத்தில் குருவின் அவசியத்தைப் பற்றியும் கூறும் ஹிந்து தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. குருவின்றி உண்மையான ஞானம் ஏற்பட முடியாது என்ற தத்துவத்திலும் அதிக உண்மை உண்டு என்றே நினைக்கிறேன். உலக விவகாரங்களில் அரைகுறையான ஆசானைச் சகித்துக்கொள்ள முடியலாம். ஆனால், ஆன்மீக காரியங்களில் சகிக்க முடியாது. பூரணத்துவம் உள்ள ஒரு ஞானியே குருபீடத்தில் அமர அருகதை உடையவர். ஆகையால் அந்தப் பூரணத்துவத்தை நாடுவதில் இடைவிடாது பாடுபட வேண்டும். ஏனெனில் அவனவனுக்கு ஏற்ற குருவையே அவனவன் அடைகிறான். பூரணத்துவத்தை அடைய இடைவிடாது பாடுபடுவது ஒருவரின் உரிமை. அதுவே அதனால் அடையும் பலனும் ஆகும். மற்றவை எல்லாம் கடவுளின் சித்தத்தைப் பொறுத்தவை....
பாரதியின் ஞானப் பாடல்- 1
மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் முதலாவது கவிதை இது. ஞானயோகத்தை வெளிப்படுத்தும் பாடல்களாக இவை விளங்குவதால் தனியே தொகுக்கப்பட்டுள்ளன...
எனது முற்றத்தில் – 6
பார்த்துப் பார்த்து பிள்ளைகளுக்கு பெற்றோர் பெயர் சூட்டுகிறார்கள். தாத்தாவின் பெயர் தாங்குகிற பேரனுக்குப் பெயரன் என்பதே சரியான பெயராம். மரியாதையால் தாத்தா பெயர் சொல்வதைத் தவிர்த்து, பெயர் சொல்லி அழைப்பதற்காகவே குழந்தைகளுக்கு செல்லப் பெயர் சூட்டுகிறார்கள். மக்கள் பெயர் வைப்பதில் வீட்டு அளவு காரணம் மட்டுமல்ல, நாட்டு அளவு காரணமும் பெரும் பங்கு வகிக்கிறது.....
வெறும் வேடிக்கை
ஹிந்து மதத்தை வேரறுத்து, இந்தியாவில் கிறிஸ்து மதத்தை ஊன்றுவதே முக்ய நோக்கமாகக் கொண்டு வேலை செய்துவரும் அப்பாதிரிகள், ஹிந்து மதத்துக்கு பிராமணரே இதுவரை காப்பாளிகளாக இருந்து வருதல் கண்டு, அந்தப் பிராமணரை மற்ற ஜாதியார் பகைக்கும்படி செய்தால் தம்முடைய நோக்கம் நிறைவேறுமென்று யோசிக்கத் தொடங்கினார்கள். இங்ஙனம், மற்ற ஜாதிப் பிள்ளைகளுக்கு ஹிந்து மதத்தில் துவேஷ புத்தியுண்டாக்குவதற்கு அடிப்படையாக பிராமணத் துவேஷம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கருத்துடையோர் சென்னை நகரத்து முக்யமான கல்வி ஸ்தலங்கள் சிலவற்றிலுமிருந்து நெடுங்காலமாக வேலை செய்து வருகிறார்கள். ....
இலக்கிய தீபம்- 8
நமது தேச சரித்திரத்திற் பெரும்புகழ் பெற்றிருந்த இப்பாடலி நகரின் அமைப்பிடம் பற்றிய செய்தியொன்று சங்ககாலத்துப் பேரிலக்கியங்களுள் ஒன்றாகிய குறுந்தொகையின் கண்ணே புதையுண்டு கிடக்கின்றது. இவ் அரிய இலக்கியம் முதன்முதலாக, வேலூர் வூர்ஹீஸ் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதராயிருந்த சௌரிப் பெருமாள் அரங்கனார் என்பவரால், தாமெழுதிய ஒரு புத்துரையுடன், 1915-ல் வெளியிடப்பட்டது. இவர் மூலபாடத்தைச் செப்பஞ்செய்தற்குப் பெருமுயற்சியை மேற்கொண்ட போதிலும், பலசெய்யுட்கள் இன்னும் திருந்த வேண்டியனவாகவே உள்ளன. ....
சிவகளிப் பேரலை- 21
மனக்குரங்கை சிவபெருமான் கரங்களில் ஒப்படைத்துவிட்டால், பிறகு அந்த மனம் சிவபெருமான் தங்குகிற கூடாரமாக, மாளிகையாக மாறிவிடும். அந்த மாளிகை எப்படி இருக்கும்? சிவபெருமான் காமனைப் பொசுக்கியவன், அழித்தவன். (காம + அரி = காமாரி). ஆகையால், அவனிருக்கும் இடத்தில் தீயாசைகளுக்கு இடமில்லை.
பிரம்ம ராக்ஷஸ்
-புதுமைப்பித்தன் நித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப்பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந்தது அவன் கதை. அவன் பொன்னை விரும்பவில்லை. பொருளை விரும்பவில்லை. போகத்தை விரும்பவில்லை. மனக் கோடியில் உருவம் பெறாது வைகறைபோல் எழும் ஆசை எண்ணங்களைத் துருவியறியவே ஆசைப்பட்டான். மரணத்தால் முற்றுப்புள்ளி பெறாது, ஆராய்ச்சியின் நுனிக் கொழுந்து வளர வேண்டுமென்ற நினைப்பினால் அவன் ஏற்றுக்கொண்ட சிலுவை அது. அன்றுமுதல் - ஆம், அது நடந்து வெகுகாலமாகிவிட்டது - இன்றுவரை, ஆசைகள் உந்த, அழிவு அவனைக் கைவிட, மரணம் என்ற … Continue reading பிரம்ம ராக்ஷஸ்